என் வலியோடு நீ பிறக்க
கண்ணிலே கண்ணீர் ,
இதழ்களில் பொன் சிரிப்பு -என்
பொன்னான இந்த பெண்ணைக்
காணும் போது..
என் உலகிற்கு வெளிச்சம்
தந்தது உன்னதமான
உன் பார்வை
முதல் முதலில் என் மீது
படரும் போது..
பசியோடு நீ அழும் போது
என் வலியையும் மறந்து
வழிந்தது கண்ணீர் என் மனதில்.
உன்னை அள்ளி அனைத்து என்
மார்பில் அனைத்த நொடி
இன்றும் நகழவில்லையடி..
கொஞ்சும் மழலை மொழி
பேசும் போது என்னையும்
அறியாமல் என் மனம்
பட்ட சந்தோசம் இன்றும்
என் நினைவில்...
பாலை - பாலா என்றும்,
செப்பல்லை - செப்லா என்றும்,
எறும்பை-எம்பு என்றும்,
போனை - கோனா என்று -நீ
உச்சரித்த வார்த்தைகள் தமிழ்
மொழியில் இல்லை
என்றாலும் உன் தாயின்
மொழியில் அழகாக
பதிந்து விட்டது என்றே
சொல்லவேண்டும்.
நித்தம் நீ பேசிய மழலை
மொழியை அழகாக கோர்த்து
வரிகளால் கவிதை அமைத்து
உனக்கே தர வேண்டும்
என்று அந்நாளில்
ஆசைப்பட்டதுண்டு
என் நெஞ்சம்...
உன் சுனங்கிய வார்த்தைகளை
கேட்கும் போது எனக்கு
சுயநினைவே இல்லை-
உனக்கு உடல்நிலை
சரியில்லாத போது..
உதிரங்கள் கூட உதிரவில்லை
உன் கண்ணில் கட கடவென
உதிர்ந்த உன் கண்ணீரை
கானும் போது என்ன
செய்தேன் என்று எனக்கே
தெரியவில்லையடி...
நீ நடை பழகும் போதெல்லாம்
வருத்தபடவில்லை பயம்
தான் பட்டேன் - இப்போதே
இவ்வளவு அழகு என்றால்
25 வயதில்?
இரவுகள் மெல்ல மெல்ல
நகர்ந்தாலும் உன் புன்னகை
சத்தம் என்னை பகலுக்கே
இழுத்துச்செல்கிறது...
உயிரற்ற பொம்மைக்குகூட
உறக்கம் வந்தது - உன்
மழலை தாலாட்டை
கேட்கும் போது..
பாடல் வரியை கேட்டு
பிழையோடு நீ பாடும் போது
அங்கும் பிறப்பது
ஒரு புதுக்கவிதை தான்
என் உயிரே...
கண்ணை இமைக்காமல்
உன் கண்ணை பார்த்தேன்
இன்று கூட அது தான் என்னை
கட்டிவைத்திருக்கிறது
உன் இமை முடிக்குள்..
எழுதியவை அனைத்தும்
கவிதை ஆகாது
உயிரே உன்னை பற்றி
எழுதும் ஒவ்வொன்றும்
கவிதை தான்...
-Sun Muga-
01-05-2013 23.59
No comments:
Post a Comment