மழலை மொழி
என் தமிழ் மொழி.
நீ தடுமாறும் மொழி
என் காதல் மொழி.
உன் முத்த மொழி
என் இதழ் மொழி.
உன் கைவிரல் மொழி
என் கனவின் மொழி.
உன் கொலுசின் மொழி
என் ஆரம்ப மொழி.
உன் உடையின் மொழி
என் சிலிர்ப்பின் மொழி.
உன் கண்ணின் மொழி
என் கவிதையின் மொழி .
உன் பெண்மை மொழி
என் ஆண்மை மொழி.
உன் நடையின் மொழி
என் நடத்தையின் மொழி.
உன் சமையல் மொழி
என் சாமர்த்தியத்தின் மொழி.
உன் மொழி என்றுமே
எனக்கான மொழி ...
-Sun Muga-
22-08-2013 22.55 PM
No comments:
Post a Comment