May 19, 2013

திருமண மேடை

என் நாட் குறிப்பில்
நானே இல்லாமல் இருப்பேன்..

அனைவரின் இடையில்
இருப்பேன்...

கண்ணீரை உள் வாங்கியபடி..

என் இதயத்தை கையில்
வைத்துக்கொண்டு,

எட்டி எட்டி பார்ப்பேன்
நீ அமர்ந்திருக்கும்
மேடையை...

எட்டாத தூரத்தில் நீ
இருப்பது போல்...

கட்டியது தாலி தானே..

ஏன் என் கனவுக்கும்
காதலுக்கும் வேலி
போல இருக்கிறது...

கனவே இனி கனவு
இல்லையோ,
கவலை தானோ?

அட்சதை தூவ மனமில்லாமல்
என் காதலை தூக்கி
எறிந்துவிடுவனோ?

காயத்தோடு உன் முன்னே
அமர்ந்துருப்பனோ?

நண்பர்கள் என்னை பார்த்து
ஏலனம் செய்வார்களோ?

சோகத்தை மறைத்து
சிரித்தபடி புகைப்படம்
எடுத்துகொள்வனோ?

வண்ண அலங்காரம்
வண்ணமில்லாமல்
தோன்றகூடுமோ?

என்ன எண்ணி என்ன
பயன்- இனி எப்படி
நாட்களை கடத்துவது
என்ற  ஒரே  ஒரு பயம் தான்..

வாழ்வது கடினம்
ஆம் நான் மட்டும்
வாழ்வது என்பது
மிக கடினம்...

காயத்தை மறைக்க
ஒரு புது காயத்தை
உருவாக்குமோ இந்த
காலம்...

எது வாழ்க்கையின்
நியதி...

வாழ தகுதி இல்லாத
இந்த கனத்தில்
மனம் முழுதும்
ஒரே கனம்..

மணம் தான் உனக்கு..
ஏன் எனக்கு மட்டும்
என் காதலுக்கு
தகனம் போல்
தெரிகிறது ...

உயிரே என்று உன்னை
கடைசியாக அலைத்து
கொள்ள கூட தயார்
இல்லை..

ஏன் என்றால் என் உயிரே
உன் முன் தீயாக எறியும்
அந்த அக்னி பீடத்தில்...

திருமண பரிசாக
என்ன தருவது?

தினம் உன்னை பற்றி
நான் எழுதிய
கவிதை புத்தகத்தையா?

இல்லை,

என் காதல் பூவைஒரு
கவரில் அடைத்து
பொக்கையாக தரவா?

இல்லை,

கடைசியாக நீ கொடுத்த
சந்தோஷத்தை தரவா?

என்ன வேண்டும் இப்போதவது
என்னிடம் கேட்டு
வாங்கிகொள்....

-Sun Muga-
19-05-2013 23.02 PM

No comments:

Post a Comment