November 30, 2013

நான் தேடும் புத்தகம்

என் வாழ்நாளில் நான் தேடும் புத்தகம் அது. அது எங்கு இருக்கிறது, எப்படி இருக்கிறது, அதன் முழுக்கொள்கை தான் என்ன? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதனின் உருவகமும், உருவாக்கமும், உரைநடையும் எனக்கு நன்றாக தெரியும். அட்டை படத்தில் இதயம் ரத்த கோளத்தில் அன்பு என்ற அம்பால் தொங்கி கொண்டு இருக்கும். ஆம் அதிக காதல் நயத்துடன், அவளின் நளினம் மின்ன ஆரம்பிக்கும், அந்த புத்தகத்தின் முதல் பகுதி. பெண்ணே! புண்ணியம் நான் செய்தவனா? இல்லை நம் உயிர் செய்ததா? நீ அன்னையாக என்று ஆரம்பித்த கவிதையும் இடம் பெற்றிருக்கும். கண்ணீர் இருக்கும். காதலும் இருக்கும். ஊடலும் இருக்கும். தேடலும் இருக்கும். என்னை தேடி வரவில்லை காதல், உன்னை தொட வந்துவிட்டது என் காதல் என்ற தோரணையும் இதில் இருக்கும். வரியாக நண்பனின் முகம் இருக்கும். என் நாடித் துடிப்பை துடிக்க வைத்த சோகமும் இருக்கும். என் தாய், தந்தையைப் பற்றி இருக்கும். அதன் முன்னுரை என் காதலியால் கவிதையாக எழுதப்பட்டு இருக்கும்.
இது நான் என்றாவது ஒரு நாள் எழுத துடிக்கும் புத்தகம் தான்.
-Sun Muga-
30-11-2013 22.34 PM

மோகனா தியேட்டர்

அவன் படிக்கும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மிக பிரபலமான தியேட்டர் தான் மோகனா தியேட்டர். பிட்டு படத்திற்கு என்று தனியாக ஒரு தியேட்டர் அது தான். எத்தனை வித விதமான படங்கள் நித்தம். அவனும் கேள்வி பட்டு இருக்கிறான், அது ஒரு விதமான தியேட்டர் என்றே! ஆனால் அவன் வயதை ஒத்த பையன்கள் அனுமதி இல்லை என்று தெரிந்து வைத்திருந்தான். அவனுக்கும் அப்போது ஆசை தான் அந்த தியேட்டர் எப்படி தான் இருக்கும் என்று பார்ப்பதற்கு. அதற்க்கான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டு தான் இருந்தான். அதற்கான வாய்ப்பும் வந்தது. பள்ளியில் இருந்து ஒரு மிருக படம் ஒன்றை கம்மியான விலையில் காண்பித்து காட்டினார்கள். எத்தனை மாணவர்கள் என்று தெரியவில்லை அவ்வளவு கூட்டம். அந்த படத்தின் பெயர் கூட நினைவில் இல்லை அவனுக்கு. அது வரை கேள்விப்பட்ட தியேட்டரை முதல் முதலில் கண்ட போது என்ன விதமான மனநிலை என்று அப்பொழுது தெரியவில்லை. அதற்கு அப்புறம் அவன் போன இரண்டாவது படம் Die Hard அவன் டிப்ளோமா நண்பர்களுடன் பார்த்த முதல் ஆங்கில திரைப்படம். ஆங்கில படத்தை ரசிக்கும் தன்மை இந்த தியேட்டர் மூலம் தான் அவனுக்கு ஊட்டப்பட்டது. இந்த இருப்பத்தி ஏழு வயது வரை அவன் பார்த்த படம் மொத்தம் இரண்டு தான் அந்த மோகனா தியேட்டரில். வாழ்க்கையில் பல இழப்புகள் அதில் இதுவும் ஒன்றே என்று சிரித்துக் கொள்ள தான் தோன்றுகிறது இன்று.
-Sun Muga-
30-11-2013 19.01 PM

ஊர்வலம்

அவன் அப்பொழுது ஜந்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். மிக புத்துணர்ச்சி மிக்க சிறுவனான அவன் அன்று தான் கண்டு வியந்தான். தன் வசிக்கும் ஊர் இவ்வளவு பெரியதா? என்று. ஆம் அன்று அவன் பள்ளியில் ஊர்வலம் போவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மானவர்கள் பலர். அதில் அவனும் கலந்து கொண்டான். அது ஒன்றும் அவ்வளவு தூரம் இல்லை. அவன் பள்ளி இருந்த
கோதண்ட ராமர் கோவில் தெருவில் கிளம்பி, காந்தி கலைமன்றம் மற்றும் காந்தி சிலை ரவுண்டானா வழியாக பஞ்சு மார்கெட்டில் முடிவடைந்த ஊர்வலம். ஏன் இந்த ஊர்வலம் என்று அவனுக்கு தெரியவில்லை. தெரியும் அளவுக்கு விவரமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் கையில் ஏதோ வாசகம் எழுதிய பலகையை ஏந்தி போனதாக இன்றும் நினைவில் இருக்கிறது. பஞ்சு மார்கெட் அடைந்ததும் அவன் நின்ற இடத்தில் இருந்து தூரமாக ஒரு மனிதன் நேரு சிலை அருகில் யார் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை. ஒரு வேலை A A Subburaja வாக கூட இருக்கலாம். அவர் பேசுவதை அவன் கேட்கவில்லை, பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இறுதியாக அவர் புறாக்களை வானில் பறக்க விட்டார். அப்பொழுது அவன் நான் என்று இவ்வாறு சுதந்திரமாக பறக்க முடியும் என்று எண்ணிய படி வானில் பறந்த புறாவை தேடி தேடிப் பார்த்தான்.
-Sun Muga-
30-11-2013 12.31 PM

November 29, 2013

சோதனை

எத்தகைய சோதனை!!
அய்யகோ!!!
என் இறைவா!!
என் மனம் அறிந்து
இத்தகைய சோதனையோ!!
இளம் பெண்ணை
என் கண் முன்னே
வாட்டி வதைக்கிறாய்!!
அதுவும் என்னால்...
இன்று என் நிலை
அறிந்தே இப்படி
சூழ்நிலையை
அமைக்கிறாயோ!!!
இதில் உனக்கு
என்ன பயன், பலன்.
என்ன நினைக்கிறாய்
என்று நிச்சயமாக
தெரியவில்லை என்
இறைவா!!
இரவுப் பொழுது
இன்னல் பல
இடைவிடாது என்னை
துரத்தி அடிக்க
என்னால் நிச்சயம் முடியவில்லை
இறைவா !!
இந்த இறைவன் என்னால் பல பெண்களை காயப்படுத்துகிறான். இன்று ஒரு பெண்ணை எழுப்பி விட்டு எனக்கு இடம் கொடுக்கிறான் இந்த ரயில் பயணத்தில். அப்படி ஒன்றும் நான் எதையும் அந்த கடவுளுக்கு செய்யவில்லை இந்நாள் வரை. ஆனாலும் என்னை சோதித்து பார்க்கிறான்.
-Sun Muga-
30-11-2013 00.03 AM

தொடர் கதை

வழக்கம்போல இன்று சென்னையில் இருந்து தன் சொந்த ஊருக்கு வந்திருந்தான் அவன். தன் பெற்றோரை கானப் போகிறான் என்று அலுவலக நண்பர்கள் நினைத்துகொள்ள, தன் நண்பனின் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான் என்று அவன் பெற்றோர் நினைத்துக் கொள்ள, ஏதோ சும்மா லீவ் போட்டு வந்திருக்கிறான் என்று அவன் நண்பர்கள் நினைத்துக் கொள்ள, அவன் எதற்காக வந்து இறங்கி இருக்கிறான் என்று அவனுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது.
ஆம் அவன் வழக்கம் போல அவளை கான மட்டுமே வந்து இருக்கிறான். அவள்? அவள் யார்?  அவள் என்றால் அவனுக்கு தனி விருப்பம். இன்னும் சொல்லப் போனால்
அவள் அவனுக்கான ஒரு தனி உலகம். அவள் மென்மையானவள். அழகானவள். அறிவுள்ளவள். அவன் அவளை மிகவும் நேசிக்கிறான். ஆனால் அவளுக்கு அது தெரியாது. அவனால் இது வரை சொல்லக் கூடிய தைரியம் இல்லை. அதை விட அவனுக்கு சொல்லுவதற்க்கான சந்தர்ப்பம் அமையவில்லை.
இன்று அவளை கான தான் காத்திருக்கிறான். அதாவது ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும் போது அவளை அவளுக்கு தெரியாமல் பார்ப்பது, அவள் வேலை முடிந்து வரும் போது, அவனுக்கு ஒரு வாடிக்கையான ஒன்று. இதில் அவன் அவளை ஏவு பார்க்கிறான் என்று நீங்கள் என்ன வேண்டாம். அவனுக்கு தெரிந்த வரை அது தான் காதல்.  அவளிடம் அவனுக்கு பேசுவதற்கான சூழ்நிலைகள் மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. அதனால் தான் பார்க்கவாது முடிகிறதே என்று எண்ணி சந்தோஷம் பட்டுக் கொண்டான். ஒரு முறை கூட தவறியதில்லை. அவளை காணமல் அவனால் இருக்க முடிந்ததாக தெரியவில்லை.
ஒவ்வொரு முறை அவன் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒவ்வொரு காரணம். அதாவது நண்பனை பார்க்க போறேன் அம்மா!! கடைக்கு போய் விட்டு வருகிறேன் அப்பா!! வெளியே போய் விட்டு வருகிறேன் அக்கா! என்று. இன்று ATM போய்  விட்டு வருகிறேன் என்று. இப்படி ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது மிக பெரிய வேலை.
ஒரு நாள் அவள் கீரின் கலர் சுடிதார் போட்டுக் கொண்டு வந்திருந்தாள். என்ன ஒரு அழகு அவள் உடுத்திய பின் அந்த உடை கூட.
இன்றும் அவன் காத்திருந்தான், மணி சரியாக 6.05 அவள் வரவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தபடி அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.
அவனுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை அவளுக்கு இன்று நிச்சியதார்த்தம் என்று..
அவன் மறுமுறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடி கிளம்பிசென்றான் சென்னைக்கு..
-Sun Muga -
29-11-2013 22.35 PM

November 28, 2013

மடிக்கணினி

கணினியே என் கண்ணில்
நீ இத்தனை நாள் இவ்வளவு
அழகாக தெரியவில்லையே!!
இன்று மட்டும் எப்படி
இவ்வளவு அழகு!!!

ஒரு ஆணை கண்டு
இன்னொரு ஆண்
பொறாமை படும் உணர்வு!!

ஒரு கன்னி பெண்
Control இல்லாமல்
எத்தனை முறை
உன்னை
தொட்டு தொட்டுப்
பார்க்கிறாள்.

அவ்வளவு மென்மையா நீ!!
மெய் மறந்து நீ
உணர்வதை
எப்பொழுது உணர்வாளோ
இந்த கன்னி பெண்!!

-Sun Muga-
28-11-2013 20.09 PM

November 26, 2013

Love Story

I want to tell you one beautiful love story my dear. I don't know I have rights to call you as my dear. But surely I don't have any other suitable word. He is a silent man and moreover he is not beautiful man also. He loves a girl who was studied with him. I think still he feel the heart beat. Every heart beat told one new love story.

Now I want to share one heart beat. One day he tries to express his love. Suddenly he got only failure due to  he saw the beautiful eyes. Did you think eyes are most powerful parts in our body? I am sure. It’s the main tool to beat any things. Second day he well tries to express his love. His bad luck he saw the lip moments of the girl. On that time he doesn’t have any reaction from his body. Third time he get a good luck. Because girl running to pick up the bus. As usual you know he saw what kind of moment? Now you may calculate one day as one year.

Now he is in fourth day. Today he had the new ideas to express his love. That is nothing but old fashion of our culture. Yes, he wants to write a love letter directly to his lovable girl. 

Letter quote is: 

"Hi my dear angel. Today you are so beautiful. I want to tell you one thing, which one is I trying to tell you last four days. May be I will get good and deep sleep after finishing this letter. This is not a normal letter. It helps to improve or increase our love. Love is so beautiful. Now only I feel it and like it. Just you can also try to feel it. At same time I do not want to compel you. If you feel the love just give me one kiss through this letter and in lips in later.  Bye!! My dear..."

She was laughed after reading this letter. Because she like and read again and again last line of the letter. It’s only reminding that boy.


Now she is in the fifth day. Both are meeting in the shopping complex. She ask that boy, why you are loved me. Simply he answers the question without fear, for marriage only.

-Sun Muga-
27-11-2013 00.03 AM

November 25, 2013

Normal Man

He is a normal man. He is very beautiful man both body and body language. I know he is only leads their entire mind, who are lived nearby him. At the same time I got a more useful knowledge and more creative ideas from him only. Now a day’s also I cleared all my queries related to anyone from him also. Moreover he did some good job which one helps his friends to keep him in their mind. 

For example:  

One day we went to one restaurant. I am not sure; its name was Banu hotel in Virudhunagar. We get a launch and juice. As usual he pays the major portion of the bill. Other friends were shared their contribution but it’s not enough. We need money to settle the bill. Suddenly we request and get the money from one important personality. He is now not in the friends list. But it’s my duty to remember that good and respectable person.  At the end of the bill settlement we have the money only for bus fare. Suddenly he gives the tips as Rs.20. We unexpected this action. Normally we Pay Rs.10 only as tips to the server. But he pays Rs. 20 at this crucial period. We are all joked and leaved from that place. We must watch this kind human behavior. 
Always he looks like a separate man both happy and sad moods. He saw the very big dangerous situation in his life history. He dropped more valuable tears from his eyes in home. I feel all those thinks from here only. At this age he got so much of painful incident. We pray God it’s not repeat in his life again. I don't know why it’s happened but we know he will get all the happy in future.
He is my best friend Surely Suren Only.

-Sun Muga-
25-11-2013 22.28 PM

November 24, 2013

அழகே!!

நீயும் நானும் பேசிக்
கொள்ள விஷயங்கள்
அதிகம் இருக்கிறது,
அதில் விஷேசம் ஏதும்
இருக்காது என்று
நம் இருவருக்கும்
தெரியும்.
தெரியாமல் இல்லை,
தெரியவும் இல்லை,
ஏன் இந்த குறும்பு
என்று.
உன் கேள்வியே மிகப்
பெரிய கேள்விக்குறி
எனக்கு.
இருந்தும் ஆராய
வேண்டும் உனக்காக,
உன்னோடு பேசிப்
பழக வேண்டும்,
எப்படி பேசுவது
என்பதை.
விடைகள் ஆயிரம்
அறிய வேண்டும்,
அதிலும் வித்தியாசம்
அதிகம் வேண்டும்.
அந்தி மாலையில்
உன்னோடு ஒரு
அன்ன நடை
வேண்டும்..
என் அழகே!!
-Sun Muga-
24-11-2013 22.28 PM

பெளர்ணமி

திரண்டு வந்த மேகம்
கூட மோகம் கொண்டதோ?
உன் மீது,
வெள்ளை முகம் கொண்ட
நிலாவே!
நித்தம் நீ இருந்தாலும்
இன்று போல் என்றுமே
நீ அழகில்லை போல,
உடல் சிலுசிலுர்க்க
இந்த இதமான குளிரில்
உன்னைப் பார்த்துக்
கொண்டே இருக்க
வேண்டும் போல
தோன்றுகிறது...
உன்னை அடைய
ஒரு இறக்கை
கேட்கிறேன் அந்த இறைவனிடம்...
-Sun Muga-
24-11-2013 21.53 PM

Light House

இன்று 24-11-2013 சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் கலங்கரை விலக்கம் சென்றிருந்தேன். நான் சரியாக 1 மணிக்கு தான் செல்ல முடிந்தது. ஆனால் மதியம் 1 முதல் 3 மணி வரை சாப்பாட்டு நேரம் என்பதால் உள்ளே யாரையும் அனுமதிக்கப் படவில்லை. நானும் எப்படியாவது இன்று பார்த்துவிட வேண்டும் என்று உத்தேசித்து அருகில் இருக்கும் காமராசர் சிலைக்கு அருகில் அமர்ந்து இருந்தேன். என்ன ஒரு விசாலமான பார்வை அந்த மனிதனுக்கு, சிலை ஆனாலும் அப்படி ஒரு கம்பீரமான தோற்றம். அவரை பற்றி கவிஞர்கள் எழுதிய கவிதைகள் இரண்டு இடம் பெற்றிருந்தது. அதில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை மட்டும் எனக்கு புரியும் படியாக இருந்தன. அமைதியாக அமர்ந்த படி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்ட விழிகள் வழியில் சென்ற பெண்ணையும் பார்த்தது. என்னிடமிருந்து சற்று தூரத்தில் அவளும் அவள் தோழியும் அமர்ந்து இருந்தார்கள். அதிகப்படியான ஒரு மேலோட்டமான பார்வை என் மீது படர்வதாகவே தெரிந்தது. நான் அவர்கள் பேசுவதை கவனிக்கும் போதே தெரிந்தது. யாரையோ கானத் தான் இருவரும் வந்திருக்கிறார்கள் என்று. என்னைப் பார்த்து சிரித்த அந்த பெண் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறாள் என்றே தோன்றி மறைந்தது. சற்று நேரம் ஆன பின் உங்க போன் கொஞ்சம் வேணும் ஒரு கால் பன்ன என்றபடி என் அருகே வந்தது. நானும் என் மொபைல் போனை கையில் கொடுத்தேன். சிறிது தொலைவு சென்று போன் பேசிவிட்டு வந்த பெண். ரெம்ப நன்றி என்று உரைத்தது. நான் அப்போதும் அமைதியாக என் தலையை அசைத்தேன். சரி என்று சொல்லும்படியாக. சிறுது நேரம் கழித்து அந்த பெண் நாங்கள் கடலுக்கு போகிறோம் என்று என்னிடம் சொன்னவாரு சிரித்தாள். நான் அப்பொழுதும் அமைதியாக என் தலையை மட்டும் அசைத்தேன். இதில் நான் சொல்ல வருகின்ற கருத்து என்னவென்றால் நான் ஒன்றும் அவ்வளவு அழகும் இல்லை. நல்லவனும் இல்லை. அந்த பெண்ணிற்கு என்னிடம் பேச வேண்டும் என்று தோன்றி இருக்கலாம். ஆனால் என்னால் முடியாத ஒரு காரியம். ஒரு பெண்ணிடம் பேசுவது என்பது எனக்கு மிக சிரமான ஒன்று. இன்னும் சொல்லப் போனால் என் கால் கைகளே நடுங்கிவிடும். இப்படி காலம் போக, திடிரென்று போலிஸ் காரர் ஒருவர், அங்கு விற்பனை செய்யும் பிளாட் பார கடை சிறுவனை கம்பால் அடித்த காட்சி என்னை ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் நெகிழ வைக்கவில்லை. ஆனால் ஒரு சிறுவன் மன வளர்ச்சி குன்றிய பையன், அவன் அப்பாவிடம், அப்பா அந்த பையனை அடிங்கிறாங்க அப்பா!!  அப்பா!! பாவம்பா!!! என்று சொன்னவுடன் அவன் அப்பா அந்த பையன் ஓடிட்டான் டா!! அப்படின்னு சொன்னவுடனே, அதுக்கு அந்த பையன் ஆனா, அழுகிறானே அப்பா!! என்று சொன்ன படி இவன் மனம் அழுவதை என் கண்ணால் நான் கண்டேன்.
கப்பலுக்கு கரையை காட்ட கூடிய இந்த கலங்கரை விலக்கத்தை கான வந்து அதை விட மிகப் பெரிய அந்த சிறு பையனின் மனதை பார்க்க முடிந்தது ஒரு மிகப்பெரிய பொக்கிஷம். இன்றுநான் எடுத்த முடிவு சரியாக தான் இருந்திருக்கிறது அதாவது எப்படியாவது Light House பார்க்க வேண்டும் என்ற முடிவு.
-Sun Muga-
24-11-2013 18.46 PM

லெமன் சாதம்

இப்போது கூட லெமன் சாதம் சாப்பிட்டு விட்டு தான் வருகிறேன். அப்படி என்ன? அதில் ஒரு சுவை என்றால் ஒன்றும் இல்லை. நான் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் போது, என் தாய் எனக்காக தயாரித்து கொடுக்கும் ஒரு சாதாரண உணவு அவ்வளவு தான். அது அவர்களுக்கு மிக எளிதாக சமைக்க கூடிய உணவு என்பதால் பெரும்பாலான நாட்கள் அது தான் உணவு. உண்ணும் போது கூட அதன் சுவை எனக்கு தெரியவில்லை என்றாலும் இன்று உணர்கிறேன் அதன் உண்ணதமான சுவையை. உயிரணு உணர்கிறது என் தாயே நீ கட்டிக் கொடுத்த லெமன் சாதத்தின் உயிரை. இன்று ஒவ்வொரு கடையிலும் நான் மட்டும் தனியாக உண்ணும்போது லெமன் சாதம் தான் சாப்பிடுகிறேன். இதில் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். எத்தனை பெரிய விலை கொடுத்தாலும் என் தாய் கொடுத்த அந்த லெமன் சாதத்தின் சுவை இது வரை எந்தவொரு சிற்றுண்டியிலும் நான் கண்டதே இல்லை. ஏன் என்றால் உங்களுக்கு அறிந்த தெரிந்த விஷயம் தான் அது பாசத்தால் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறை நான் உண்ணும் போது அது என் தாயின் பாசத்தை வெளிப்படுத்துகிறது.
-Sun Muga-
24-11-2013 17 46 PM

November 23, 2013

காதலை சொல்லிவிடவா?

இன்று நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால், என்னை கட்டி அனைத்து விடுவாயா? இல்லை கனத்த ஒலியோடு அழுதுவிடுவாயா? அது எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரை உன்னை நான் காதலிக்கிறேன். "நிலமெல்லாம் ரத்தம்" என்ற புத்தகத்தை நான் படித்து பார்த்தேன். கிட்டத்தட்ட 1000 வருட கால சரித்திரம் அது. ஆனால் என் சோகத்தை விட அது ஒன்றும் மிக பெரியதாக தெரிவில்லை. என்ன! பாலஸ்தீனர்கள் அவர்கள் பூர்வீக இடத்தை அடைய போராடுகிறார்கள். நான் என் பூவின் இதயத்தில் ஒரு சிறு இடம் அடைய போராடுகிறேன். அவர்களுக்கு என்று ஒரு  தலைவன் இருக்கிறான். எனக்கு என்று என் காதல் மட்டுமே இருக்கிறது.
அதிகாலை சூரியன் போல தினம் எழுகிறேன். கனத்த ஏக்கத்தோடு உன் குரலை கேட்க கேட்க கற்பனையில் அப்படியே தூங்கி வழிகிறேன். கனவு எல்லாம் நீ என்று பொய் சொல்ல மாட்டேன். கனவில் நீ வர வேண்டும் என்று தான் உண்மையாக நான் தூங்க எத்தனிக்கிறேன். எதிர்பாராமல் என்றாவது ஒரு நாள் உன்னை சந்திக்க வேண்டும் அந்த கனவில். உன் கைகளை கோர்த்தபடி என்னை மன்னித்து விடு என்று கேட்க வேண்டும். ஏன்? எதற்கு? என்று கேட்காமல் நீ என்னை மன்னிக்க வேண்டும். என் எதிர்காலம் நீ என்று நான் எண்ணவில்லை. உனக்கு ஒரு நல்லபடியான காலம் அமைய வேண்டும் என்றே நினைக்கிறேன். அதற்க்காக தான் நானும் காத்திருக்கிறேன். இன்று என் கண் முன் தெரியும் மனிதர்கள் கூட ஏளனம் செய்கிறார்கள், எப்போது கல்யாணம் என்று? காதலின் அருமை பெருமை தெரியாமல். கண்ணீர் வருகிறது. கண்களிலே நீர் வராமல். அது எப்படி சாத்தியம் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் வருகிறது. இதோ பார்!!  அதை உள்ளங்கையில் வாங்கிய ஈரம் கைகளில். உன்னை காயப்படுத்தி என் காதலை வெளிப்படுத்த விரும்பவில்லை. விதைகளை என்றோ நான் விதைத்துவிட்டேன். அது விடியும் போது முளைக்கிறதா? இல்லை என் வாழ்க்கை முடியும் போதுமுளைக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை.  அதற்கு உரமாக என் காதலையும் தூவி விட்டேன். இன்று துயரப்படுகிறேன். தூக்கம் இல்லாமல். உன் துணை இல்லாமல். ஒரு துணிவு இல்லாமல். தூய்மையான உள்ளம் கொண்ட காதல் நீ! நீ வாழ்க! நீ வளர வேண்டும்.
நான் ஒன்றும் நல்லவன் இல்லை. என்னை நல்லவன் என்று சொல்லுவர்களும் நல்லவர்கள் இல்லை. ஏன் என்று அலசி ஆராய நேரமில்லை. ஆனாலும் நான் நல்லவன் இல்லை.
நாளை என்றோ ஒரு நாள் நீ இந்த வரிகளை நிச்சயமாக படிப்பாய் என்று எனக்கு தெரியும். மற்றவர்கள் படிப்பதற்கும் நீ படிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அவர்களுக்கு இதில் உள்ள எழுத்து பிழைகள் தெரியலாம். ஆனால் உனக்கு என் வாழ்க்கையிலும், மனதிலும் ஒரு சிறு காதல் இருப்பதாகவே தெரியும்.
வெகு காலம் இருக்க விருப்பம் இல்லை என் உயிரே!! இப்பொழுது இந்தகனம் இந்த இரவே கூட முடிந்து விட்டால் நல்லது என்று தான் தோன்றுகிறது.
-Sun Muga-
24.11.2013 00.00 AM

கல்லறை

ஏதோ ஒன்று என்னை அழைக்கிறது. அதிகம் நேரம் எடுத்து கொள்ளாதே என்று உரைக்கிறது. உறக்கம் வரவில்லை. வருவதற்கு உண்டான சாத்தியமும் இல்லை. என் உறைவிடம் முழுதும் உறவினர்கள் நினைவுகள். நிம்மதி இல்லை. ஆம் நித்தம் நிம்மதியான உலகம் இல்லை. உறங்க மறுக்கும் விழிக்கும் ஏதோவொரு ஏக்கம். எண்ணில் அடங்கா ஏக்கம். கண்களில் கண்ணீரும் இல்லை. என் உடல் வெந்து எரியூட்டப்பட நாள் நெருங்கிவிட்டது. அதை தான் என் உயிரும் எதிர்ப் பார்த்து காத்திருக்கிறது.
அது, மானை வேட்டையாட காத்திருக்கும் சிங்கம் போல, மாமிசை வாடையை தேடி அலையும் ஒரு நரியை போல, பணத்தை தேடும் ஒரு அரசியல் வாதியை போல, மரத்தை தேடும் ஒரு குரங்கை போல, இறை தேடும் ஒரு பறவையை போல...
சீக்கிரம் உன்னை நெருக்கி விடம்  ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன் என் கல்லறையே!!!
-Sun Muga-
23-11-2013 23.17 PM

November 20, 2013

Office பேய்கள்

இது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. கிட்டத்தட்ட ஒரு MNC கம்பெனி மாதிரியான ஒன்னுன்னு நினைவில் வைத்துக்கொள்ளலாம். எப்பவும் போல ரெம்ப எதாற்தமா தான் ஆபிஸ் வேலையெல்லாம் போய்கிட்டு இருந்தது. திடீரென்று பார்த்தா ஒரே பேய்கள் அட்டகாசம். காலைல வந்து ஆபிஸ்-ல பார்த்த பேப்பர் எல்லாம் கீழ கிடக்கும். கம்ப்யூட்டர் எல்லாம் ஆன் ஆகி இருக்கும். டேபிள்- ல இங்க் கொட்டி இருக்கும். அப்படி இப்படின்னு டெய்லி நடந்து கிட்டு இருந்தது.

இப்படியே போக போக ஆபிஸ் -ல எல்லாரும் Complaint பண்ண ஆரம்பிச்சாங்க... இதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு ஒரு மீட்டிங். அப்பதான் ஒரு ஆளு கிண்டலா பேசாமா அந்த பேய்களையும் வேலைக்கு வச்சுகிட்டா கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்ன்னு சொல்லி சிரிச்சாரு...

MD  கொஞ்சம் யோசனைக்கு பின்னாடி, உடனே அந்த பேய்கள் எல்லாம் கூப்பிட சொன்னாரு. இதோ பாருங்க இது நாங்க தொழில் பன்ற இடம் இங்க வந்து இவ்ளோ அட்டகாசம் பன்னா நாங்க என்ன பன்ன முடியும். வேனும்மானா உங்களுக்கும் இங்க வேலை போட்டுக் கொடுக்கிறேன். அதுக்கு ஏத்த சம்பளமும் கொடுக்கிறேன். ஆனா இந்த மாறி தொல்லையெல்லாம் பன்னக் கூடாது. அப்படின்னு சொன்ன உடனே அந்த பேய்களும் வேலைக்கு ஜாயின் பன்ன ஓகே சொல்லிருச்சு. அந்த நிமிடமே Appointment letter ரெடி... ஜில் ஜில், ஜகன்மோகினி , ராட்சசி, விடாது கருப்பு அப்படின்ற பெயர்களில்.. சொன்ன மாதிரி எல்லாரும் வேலைக்கு ஜாயின் பண்ணி ஒழுங்காக வேலையெல்லாம் போய்கிட்டு இருந்தது. அப்படியே ஒரு மாதம் முடிந்தது. So முதல் மாத சம்பளம். இந்த பேய்கள் எல்லாம் முதல் மாத சம்பளத்தில் ஒரு பார்ட்டி ஒன்னு ஏற்பாடு பன்னாங்க.. அப்ப தான் ஒருத்தன் வந்து MD காதுல ஏதோ சொன்னான்.

உடனே MD ரெம்ப கோபமாக, பேய்களோட டீம் லீடரை கூப்பிட்டு, இரண்டு Workers இரண்டு நாளா காணும். எனக்கென்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்குன்னு சொன்னாரு. லீடர் உடனே நிச்சயம் நாங்க இல்ல. நாங்க இப்போது எல்லாம் ரெம்ப மாறிட்டோம். அப்படி சொல்லிட்டு தன்னோடு கூட்டத்தை தனியா கூப்பிட அவங்களுக்கு உள்ள ஒரு சின்ன மீட்டிங். ஆரம்பத்திலேயே லீடர், யார் இத செய்தது. எனக்கு நல்ல தெரியும் நம்ம கூட்டத்தில் இருந்த யாரோ ஒருத்தர் தான் இத செஞ்சு இருக்கனும். உடனே ஒரு பேய் நான் தான் நேத்து நைட் ரெம்ப பசி அதான்  ரெண்டு பேர சாப்பிட்டேன், அப்படின்னு ரெம்ப பயத்தோடு சொல்லுச்சு. உடனே லீடர், அடே!! எத்தனை முறை சொல்லிருக்கிறேன். எப்பவுமே வேலை பார்க்கிறவுங்க மேல கை வைக்ககூடாதுன்னு. இதுக்கு முன்னாடி எத்தனை மேனேஜர் நம்ம அடிச்சு சாப்பிட்டுருக்கிறோம். எவனாது தேடுனானா? இப்ப பாரு விஷயம் ரெம்ப பெருசா இருக்கு. சரி சரி இனிமேல் இப்படில்லாம் செய்யாதே அப்படின்னு சொல்லி மீட்டீங் முடிச்சு வைத்தது.

November 17, 2013

First Love

என்னவள் பெயர் ;

ஒரு பூவை எந்த பக்கம்
இருந்து பார்த்தாலும்
அழகு தான்,
அதுபோல,
முன்னும் பின்னுமாக
அழகான பெயர்
அவளைப் போன்றே!!!

அவள் விரலின் ஏக்கம்;

அவள் விரல் நுனியில்
கண்ணீரை கண்டேன்,
அவள் இதழை விட்டு
பிரியும் தருணத்தில்...

அழகான இமை;

அவள் இமைக்கும்
நொடியை கூட
எண்ணி விடலாம்,
ஆனால் அவள் இமை
இசைக்கும் வார்த்தையை
மட்டும் கணக்கிட முடியாது..

என்னுடையவள் உடை;

அவள் பாரம்பரிய
உடையை கூட
உடுத்திக் கொள்ள
கூச்சப் படுகிறாள்,
எங்கே கட்டி அனைத்து
விடுமோ என்று,
அது என் மேனியைப்
போல் கருமை
என்பதால்...

உயிர்;

என் உயிர் அவள்
என்று என்னால்
வர்ணிக்க முடியவில்லை,
ஏன் என்றால்,
என்றோ ஒரு
நாள் பிரிந்து விடும்
என்பதால்...

கடிதம்;

நடுங்கிய கையோடு எழுதினேன்,
என் முதல் காதல் கடிதம்.
என்ன எழுதுவது
என்று தெரியாமல்,
இன்றும் தெரியவில்லை,
என்ன எழுதினேன் என்று!!

கனவு;

என் கண்கள் கனவுகள்
நிறைந்தது,
மனதில் நினைவுகள்
மலர்கிறது,
நினைவுகளை திரும்பி
பார்க்கும் போது தான்
கண்ணீர் அலையாக
வருகிறது.
என் கண்ணீர் அலைகள்
அவள் தங்கப் பாதங்களை
தழுவ வேண்டும் என்று
பலமுறை படையெடுத்து
தோற்றுப்போய் திரும்புகிறது
அவள் கரையில்
நிற்கும்போது..

என் காதல்;

காதல் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடினேன்,
அது "நீ" மட்டுமாக
பிரதிபலிக்கிறது.
"நீ" என்ற சொல் "நான்"
ஆக மட்டுமே இருக்கிறது
இன்று வரை..
"நீ" = காதல்

கல்லூரிக் காலம்;

விடிந்தால் உன்னைக் கான,
சூரியனை விரல் பிடித்து
அழைத்து வந்தேன்
விடியல்காக...

உன்னைப் படிக்க தினமும்
வருகிறேன் கல்லூரிக்கு
என் பெற்றோரை
ஏமாற்றிவிட்டு..

நீ சிரித்தாலும் முரைத்தாலும்
சிரிக்கிறேன் நான்..

திரும்பி திரும்பி பார்க்கிறேன்
நீ திரும்பிய இடம் எல்லாம்
என்றோ ஒரு நாள்
நீ என்னை
திரும்பி பார்பாய் என்று..

நீ நடந்துபோன பாதையை
பார்க்கிறேன் உன்
பாதச் சுவடை விட என்
பாதச் சுவடு அதிகமாக
தெரிகிறது உனக்காக
காத்திருந்தால் என்னவோ!

எத்தனை பனிக்கட்டிகள்
உருகினவோ
உனக்காக காத்திருந்த
வேளையில் Ice கடையில்..

பேருந்தில் நீ தடுமாறி
விழுந்ததால் நானும்
தடுமாறினேன் காதலில்
அந்நொடி முதல்..

தனிமைச் சிறையில்
ஆயுள் தண்டனை
கைதியாக அலைகிறது
மனது உன்னை
காதலித்த குற்றத்திற்காக ...

கொட்டும் மழையை
அன்று தான் ரசித்தேன்
மழைக்காக நீ
ஒதுங்கிய சிறு நொடி
என் கண்கள் பட்ட
சந்தோஷத்தில்..

நான் செய்த சாதனை
நமக்கு மட்டுமே தெரியும்
உன்னை மட்டும்
படித்து பாஸ் ஆனேன்
DMOP

வெற்றுக் காகிதத்தில்
கவிதை எழுதினேன்
தேர்வின் போது..

என் பேனாவில் கண்ணீர்
விட்டு எழுதுகிறேன்
என் கவிதையைப் பற்றி
கவிதை,
எங்கே "மை" க்கு
பற்றாக்குறை ஆகிவிடும்
என்பதால்..

உன்னை பின்னோக்கி
வந்த கால்கள்
இன்று பின்னோக்கியே
செல்கிறது உன்
சந்தோஷத்திற்காக..

வாழும் வாழ்க்கை
உன்னோடு இல்லை
என்றாலும் வாழ்ந்த வாழ்க்கை
உன்னோடு மட்டுமே!!
என் கண்களோடு "நீ"
இருப்பதால்
என்னோடு என் "உயிர்"
இருக்கிறது..

இந்த உயிர் மூச்சும்
திகைத்தது
உன் அழகை கண்டு,
உன் வீட்டுத் தெருமுனையில்
அந்நொடி என்னையும்
அறியாமல்
உன் செங்கருங் கூந்தல்
வாசனையை சுவாசித்து
விட்டேன்,
என்னை மன்னித்து விடு

என்னையும் அறியாமல்
என் கருவிழி உன்
நெஞ்சை வருடி
இருந்தால் என்னை
மன்னித்து விடு..

அவ்வப்போது என் கண்ணீர்
துளிகளுக்கும் விடை
கொடுக்கிறேன்
என்னவள் என்னோடு தான்
இருக்கிறாள் என்று!!

என் இதயத்தில் வலி
வழியும் போதெல்லாம்
விழி வழி உன்
இதழ்களை கவ்விக்
கொள்கிறேன்..
வலியும் வெட்கப்பட்டு
ஓடி விடுகிறது...

விழி மூடி நன்றாக
நான் உறங்குகிறேன்
கரு விழியாக
என்னுள் நீ
இருப்பதால்..

உன்னைப் போல்
பிணிக்கும்(நோய்க்கும்)
என்னை பிடிக்கவில்லையாம்
உன்னை நினைத்து
நினைத்து சிரித்துக்
கொண்டே இருப்பதால்..

கருமையாக தெரியும்
ஒவியம் "நீ"
உடையோடு இருப்பதால்
உன் உடையின் ஒரு
நூலாக பிறந்து இருந்தால்
கூட சற்று அதிகமாக
நேசித்து இருப்பாய்..

வளர் பிறையான உன்
முகத்தை கான
சூரியனாக காத்திருக்கிறேன்
ஆனால் "நீ" என் விழியின்
ஒளி மீது தான்
நடந்து செல்கிறாய்! தினமும்

-Sun Muga-
2010

November 15, 2013

இதயம் 2 இதயம்

ஒரு சிறு கற்பனை நான் காதலனாக..
அவளின் பெயர் அநேகமாக காதலியாக தான் இருக்க முடியும். ஏன் என்றால் என் கண்களுக்கு அவள் அழகாக தெரிகிறாள். அவளின் குரல் மட்டுமே என் காதுகளுக்கு கேட்கிறது. அது மட்டும் அல்ல அவளின் பார்வை அவ்வப்போது என்னையே தொட்டுப் பார்க்கிறது. அதனால் தான் அவளிடம் அவள் பெயரையே கேட்கவில்லை.
காதலி ஒரு நாள் தனியாக வந்தாள். அதாவது தனியாக வருவதற்கு என்று அன்று தயாராகி வந்தாள். என்னைப் பார்த்து சிரித்தாள். இது என்ன சிரிப்பு? சிரிப்புகளிலே இது தான் சிறந்ததோ!!! யோசிக்கவில்லை பேசிக் கொண்டாள் விழியால். மெல்லப் பேசு என்கிறது அவளது இதழ். நாளை பார்க்கலாம் என்கிறது கால்விரல். தள்ளிப் போகாதே என்கிறது கைவிரல். இரண்டிற்கும் வாக்குவாதம். கண்கள் காதலில் தவித்து, இறுதியில் கால் விரல் ஜெயித்தது. உன்னை நாளை பார்த்துக் கொள்கிறேன் என்று கோபத்தோடு உஷ்ணம் ஏற சென்றது கைவிரல்.
இரவு நெருங்க நெருங்க அப்படி ஒரு படபடப்பு இதயத்தில். என் காதலி என்னை தான் நினைத்துக் கொண்டு இருப்பாளோ என்று? அய்யோ இல்லை இல்லை ஏங்கிக் கொண்டு இருப்பாளோ? என்று. அங்கே காதலியும் கண்களை மூடினால், இதயத்தின் ஓசை சத்தம் மெதுவாக குறைந்தது. ஓ!! அவள் மெல்ல பேசுகிறாள் போல!! வீட்டில் அப்பா, அம்மாவிற்கு கேட்கும் இல்லையா அதான்.. மெல்லச் சிரித்தாள் கண்களை மூடியபடி, அவன் கண்களை பார்த்து, மறுகணம் சிரித்துக் கொண்டே கேட்டாள், ஏன் "கை" நடுங்குகிறது என்று. ஒரு பயம். ஆம்பளைக்கு என்ன பயம்? உன் காதில் சொல்ல வேண்டும். "ம்ம்ம்" சொல்லு. பயம் என்று நான் சொன்னால் என்னை கட்டி அனைத்துவிடுவாயா? இல்லையா? ஏன் இந்த கேள்வி இப்போது? பதில் வேண்டும். இப்போது இல்லை. திருமணத்திற்கு பின் வேணும்னா!! யோசிக்கலாம். ஓ!!! அப்படியா? உனக்கு பயமாக இல்லையா? ஏன்? என்னோடு தனியாக பேசுவதற்கு. நான் தனியாக பேசவில்லையே? உன்னோடு தானே பேசுகிறேன். என்ன காமெடியா? இல்லை என் அன்புக் காதலா!! நான் என் காதலனோடு, என் காதலோடு தான் பேசுகிறேன் அப்புறம் என்ன? அது சரி. நாளை எங்கு சந்திக்கலாம்? நாளை என் வீட்டில் யாருமே இல்ல.. நீ இங்கேயே வந்துரு... ஏய் என்ன சொன்ன? உங்க வீட்டுக்கா?? ஆமாம் என்றாய் சந்தோஷத்தோடு...
மறுநாள் என் பட்டாம்பூச்சியின் கூட்டுக்குள் சென்றேன். என்ன ஒரு அழகு. அவளும் அவள் இருப்பதால் அந்த அறையும். அதிகாலை சூரியன் ஒளிப் பட்டு தெரித்த ஒளிக்கதிர் இன்னும் இருக்கும் போல அப்படி ஒரு பிரகாசம் அந்த அறையில். என்னைப் பார்த்து ஒரு புன்னகை. கை கோர்த்தப் படி "ம்ம்ம்" எப்படி இருக்கு? என்றாள் அவள். ரெம்ப மிருதுவாக இருக்கு என்றேன். ஏய்!! என்ன? என்றாள். உன் கை விரல் என்றேன். இப்பொழுது கண்கள் சிரித்தது. மெல்ல மெல்ல அவள் மார்பும் ஒரு கனத்த சிரிப்போடு என்னை நோக்கி சரிந்தது.
சரி ,சரி முதல் முறை நம்ம வீட்டுக்கு வந்துருக்க. என்ன வேண்டும் என்று கேட்டாள். ஒரே ஒரு முறை கண்களை மூடியபடி உன் கைவிரல்களை தீண்ட வேண்டும் என்றேன். ஏன் என்றாள். நம் காதலின் மென்மையை கை விரலும், கண்களும் ஒரு சேர அனுபவிக்க வேண்டும் என்றேன்.
அந்த நொடி உன்னோடு
நான் எழுதிய வரிகள் ;
கண் அல்ல உனக்கு
இருப்பது பெண்ணே!
ஒரு காகிதம்
நான்
சிந்தித்த கவிதைகள்
அனைத்தும் அதில்
பிரதிபலிக்கப்பட்டுள்ளது..
உன் மோதிர விரலை
தடவிப் பார்த்தபோதே
இத்தனை மோகம்
என்றால்?
இன்னும் உன்னுள்
எத்தனை?????
-Sun Muga-
15-11-2013 23.50 PM

November 11, 2013

பிரியமானவளே

உன் பார்வையை
பார்த்து பல
நாட்கள் ஆகிவிட்டது,
உன் புன்னகையை
ஏந்தியும் பல நாட்கள்
ஆகிவிட்டது.
பெண்ணே!!
நீ வாழும்
உலகம் எதுவென்று
எனக்கு மட்டும்தான்
புரியும்.
-Sun Muga-
17-11-2013 21.00 PM

November 10, 2013

உளி

இளம் வயதை ஒட்டிய ஒரு மனிதன். கல் உடைக்கும் தொழில். காலை முதல் இரவு தூங்கும்  வரை கல் உடைப்பது மட்டுமே மிக சிறப்பான வேலை. உளியின் சத்தம் மட்டுமே இவன் காதுகளுக்கு கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு முறை கூட இவன் வெளி உலகத்தின் வாசனையை நுகர்ந்தது இல்லை. இவன் அறிந்த விஷயங்கள் இது தான். உளி, கல், உடைக்கும் சத்தம். தினம் தினம் ஒரு வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது.

ஒரு நாள் இரவு தூங்க போகும் முன் படுத்துக்கொண்டே யோசித்தான். நாம் ஏன்   இப்படி ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்து கொண்டு இருக்கிறோம் என்று. ஆழ்ந்த யோசனையிலே தூங்கி எழுந்தான் அதிகாலை பொழுதில். வழக்கத்திற்கு மாறாக காலை எழுந்து தெருப் பக்கம் போனான்.

அதிகாலை பொழுது அழகான பெண்கள் கோலமிட்ட படி வாசலை அழங்கரிக்க, அப்பாவி சிறுவன் ஒருவன் பால் பாக்கெட்டை ஒவ்வோரு வீட்டின் முன் போட்ட படி இவனை கடந்து சென்றான். பூக்களை பறித்த படி என்னப்பா இந்நேரம் என்ற படி இவனிடம் ஒரு பெரியவர் கேட்க பதிலே கூறாமல் புன்னகை புரிந்தான். யாருமே கண்டு கொள்ளாத ஒரு உலகத்தை இவன் கண்டு கொண்டதாக ஒரு நினைப்பு அப்பொழுது அவன் மனதில் ஊறியது.

மெல்ல நடந்து போய் ஒரு கோயில் வாசலை உற்றுப் பார்த்தப்படி அமர்ந்தான். ஒரு திடம் மிக்க மனிதர் கோவிலை வணங்கிய படி, வாயில் ஏதோ முணுமுணுத்தப் படி வணங்கிக் கொண்டு இருந்தார். இவனுக்கு அந்நேரத்தில் தோன்றியது அவர் என்ன முணுமுணுக்கிறார் என்ற எண்ணம் மட்டுமே. உளியின் சத்தம் மட்டும் கேட்டவனுக்கு இப்போது தான் கோயில் வாசலில் பக்தி பாடல்கள் கேட்கிறது. புரியும் படியாக அவனுக்கு இல்லை என்றாலும் மிகவும் ரசிக்கும் படியாகவே இருந்தது.

ரசிக்கும் விதமான எத்தனை நிகழ்வுகள் நம் அருகிலேயே உள்ளது. அதை அனைத்தும் நாம் ஏன் இத்தனை நாள் தவர விட்டோம் என்று எண்ணியபடி
மறுபடியும் தன் வீட்டிற்கு வந்து உளியால் கற்களை உடைக்க ஆரம்பித்தான். ஆனால் இன்று அவன் உடைக்கும் போது தானும் அந்த நகரத்து வாசிகளுடன் கலந்து விட்டதாகவே எண்ணினான்.

இந்த உலகில் எண்ணற்ற விஷயங்கள் ரசிக்கும் படியாக இருக்கிறது ஆனால் அதை ரசிக்கும் மனிதர்கள் தான் குறைவு.

-Sun Muga-
11-11-2013 00.18 AM

உன்னைப்போல்

என்ன என்னவோ புத்தகம்
நான் வாசித்தாலும்
எண்ணற்ற கவிதைகள்
எழுதினாலும்,

உன்னைப்
போல ஒரு முறை கூட
என்னால் எழுத முடியவில்லை,
எதாற்த்தமான வரிகளை
தாங்கி இருக்கும்
உன் கவிதைகள்
என்றுமே தமிழின்
ஒரு விதைகள்.

அறிய வகை எழுத்துக்களை
நீ அறிந்து இருப்பது
எனக்கு ஒரு அதிசயம்.

உனக்குள் நல்ல
கவிதைத் தன்மை
இருக்கிறது அதைவிட
அதில் நல்ல கலைத் தன்மை
தனியாக தெரிகின்றது.

வெகு தொலைவில்
நான் இருந்தாலும்
உன் கவிதை வரி
மிக நெருக்கத்தில்
இருக்கச் செய்கிறது.

நீ எழுத வேண்டும்...
எழுத முற்பட வேண்டும்...
ரசிப்பதற்கு ஆட்கள் இல்லை
என்றாலும்கூட.....

என் சக தோழி சுந்தரிக்கு
சமர்ப்பணம்.

-Sun Muga-
10-11-2013 23.33 PM

திவாகர்

உனக்கும் எனக்கும்
அப்படி ஒன்றும்
பழக்கம் இல்லை,
ஆனால் இன்று தான்
நீ இந்த உலகத்தில்
மானுடனாக இல்லை
என்ற விஷயம் அறிந்தேன்.
உன்னை எனக்கு
பிடித்தற்க்கான
காரணம் என்று
பார்த்தால் ஒரு
மனித தன்மையோடு
பேசும் ஒரு மனிதன்
அவ்வளவுதான்.
அதை தாண்டி
நீ ஒரு MGR ரசிகன்.
எவ்வளவு இயல்பாக
பேசினாய் நீ,
எதாற்த்தம் நிறைந்த
ஒரு இதயம்
உனக்கு.
என் இதயத்தில்
உனக்கும் ஒரு
இடம் இருக்கிறது.
நீ என்றும் எனக்கு
இதயக்கனி தான்.
இதயவலி கண்டு
தன் உயிரை
இழந்த ஒரு
சாதாரண மனிதன்
திவாகர் - அரக்கோணம்
-Sun Muga-
10-11-2013 22.13 PM

மேகம்

மெல்ல மெல்ல நான்
நடந்து மேகத்தில்
நுழைய ஆசை.

என் மேனியெங்கும்
ஒரு சிலு சிலிர்ப்பு
மேகத்தை கானும் போது.

பார்க்க பார்க்க ஒரு வித
பரவசம், அன்று நான்
நடந்த பாதைகள்
அனைத்தும் என் வசம்.

நேற்று நான் பார்த்த
மேகம் இன்று இல்லை,
ஆனால் இன்று போல்
என்றுமே இல்லை
என்று எண்ணுகிறேன்.

என்றாவது ஒரு நாள்
உன்னிடம் வருவேன்
அதுவரை உன்னை
பார்த்து ரசிக்க
ஆசை பார்வையில்.

-Sun Muga-
10-11-2013 21.58 PM

10-11-2013 கண்ணீர்

வடிவம் இல்லை,
இது வந்தடைந்த சுவடும்
இல்லை,
வார்த்தைகள் இல்லை,
வலியும் இல்லை,
வெட்ட வெளி பாதையில்
நடக்க கூட முடியவில்லை,
தலை முழுதும் ஒரே
கணம்.
கண்ணீர் முழுதும்
தேங்கி தலையை
ரனகலப்படுத்துகிறதே
என் இறைவா...
சோகம் என்னால்
ஆனவை தான்,
அதை துரத்தும் ஆனை
மட்டும் உன்னிடம்.
-Sun Muga-
10-11-2013 00.25 AM

November 9, 2013

மாமன்

அழகான ஒரு ஆனந்த
சிரிப்பு,
இரு குழந்தைகள் இன்னும்
ஒர் சிறப்பு.

பொன் பாதம் மண்ணில்
பட எண்ணம் இல்லாமல்
தன் கையிலே சுமக்கும்
மாமன் இவன்.

மதிய வெயிலும் சூழவில்லை,
மயங்கிய மாலையும் சூழவில்லை,
புகைப்படத்தின் புதினம் அது.

எந்நாளும் தூக்கி சுமக்க
மாமனுக்கும் ஒரு பேராசை.

பேசும் மொழிக் கூட
புன்னகை தான் இருவருக்கும்.

-Sun Muga-
09-11-2013 19.30 PM

November 1, 2013

ரைஸ்மில் (1955)to டியூசன் செண்டர் (2013)

ABC பாரம் ஸ்ரீ ராஜேஸ்வரி ரைஸ்மில்
இது தான் இந்த இடத்தின் பெயர் என்று எனக்கே  லேட்டாக தான் தெரியும். ஆனால் இப்பொழுது Achiever Coaching Centre என்ற பலகை. இது ஒன்றும் ஒரு எழுத்துக்களால் ஆன ஒரு பலகை மாற்றம் இல்லை. அதையும் தாண்டி ஒரு தலைமுறையின் மாற்றம் என்று தான் என்னால் சொல்ல முடிகிறது.
தன் விளைநிலங்களை விற்று வித விதமான வீடுகளைகட்டி வாழ்ந்து வரும் மனிதர்களின்  குழந்தைகள் தான் இன்று பயில்கின்றனர் இந்த டியூசன் செண்டரில்.
நெல்மூட்டைகள் போய்
புத்தக பை மூட்டைகள்,
நெற்கள் உளறிய களம் போய்
பிள்ளைகள் உலரும்  களம்,
தனிமையில் தவிக்கும் தள்ளுவண்டி,
உம்மியை நெருப்பிற்க்கு
இறையாக்கி வென்புகையை
வெளியேற்றிய புகைக்கூடும்
இன்று வெறும் எலும்பு கூடு,
செங்கதிர் வெயிலில் ஆடிய
இடமும் இன்று வெறும்
செங்கற்கள் தான்.
காரணம்
ஒரு காலத்தின் மாற்றம்...
அப்பா,
நீங்கள் பலகை பிடித்த
தோரணை இன்றும்
என்னை தொந்தரவு
செய்கிறது...
தொட்டியில் நெல் அளந்து
போடும் போது நீங்கள்
எண்ணிய எழுத்துக்கள் (1,1, 2,2,3, 3) இன்றும் என் எண்ணங்களில்..
தொட்டியில் நனையும்
நெற்கள் கூட ஒரு பகல் தான்
நனையும் ஆனால் நீங்கள்
ஆயும் முழுதும் நனைந்து
விட்டீர்கள் வேர்வைத் துளியில்..
கொழுத்தும் வெயிலும்
கொட்டும் மழையும்
பார்த்திராத என் அப்பாவை
நான் பார்ப்பது என் அதிஷ்டம்.
பிறவி குணம் மாறாமல்
பிள்ளைகளை வழிநடத்தும்
பேச்சியம்மா ஒரு பொக்கிஷம்.
-Sun Muga-
02-11-2013 11.18 AM