November 30, 2013

மோகனா தியேட்டர்

அவன் படிக்கும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மிக பிரபலமான தியேட்டர் தான் மோகனா தியேட்டர். பிட்டு படத்திற்கு என்று தனியாக ஒரு தியேட்டர் அது தான். எத்தனை வித விதமான படங்கள் நித்தம். அவனும் கேள்வி பட்டு இருக்கிறான், அது ஒரு விதமான தியேட்டர் என்றே! ஆனால் அவன் வயதை ஒத்த பையன்கள் அனுமதி இல்லை என்று தெரிந்து வைத்திருந்தான். அவனுக்கும் அப்போது ஆசை தான் அந்த தியேட்டர் எப்படி தான் இருக்கும் என்று பார்ப்பதற்கு. அதற்க்கான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டு தான் இருந்தான். அதற்கான வாய்ப்பும் வந்தது. பள்ளியில் இருந்து ஒரு மிருக படம் ஒன்றை கம்மியான விலையில் காண்பித்து காட்டினார்கள். எத்தனை மாணவர்கள் என்று தெரியவில்லை அவ்வளவு கூட்டம். அந்த படத்தின் பெயர் கூட நினைவில் இல்லை அவனுக்கு. அது வரை கேள்விப்பட்ட தியேட்டரை முதல் முதலில் கண்ட போது என்ன விதமான மனநிலை என்று அப்பொழுது தெரியவில்லை. அதற்கு அப்புறம் அவன் போன இரண்டாவது படம் Die Hard அவன் டிப்ளோமா நண்பர்களுடன் பார்த்த முதல் ஆங்கில திரைப்படம். ஆங்கில படத்தை ரசிக்கும் தன்மை இந்த தியேட்டர் மூலம் தான் அவனுக்கு ஊட்டப்பட்டது. இந்த இருப்பத்தி ஏழு வயது வரை அவன் பார்த்த படம் மொத்தம் இரண்டு தான் அந்த மோகனா தியேட்டரில். வாழ்க்கையில் பல இழப்புகள் அதில் இதுவும் ஒன்றே என்று சிரித்துக் கொள்ள தான் தோன்றுகிறது இன்று.
-Sun Muga-
30-11-2013 19.01 PM

No comments:

Post a Comment