November 30, 2013

ஊர்வலம்

அவன் அப்பொழுது ஜந்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். மிக புத்துணர்ச்சி மிக்க சிறுவனான அவன் அன்று தான் கண்டு வியந்தான். தன் வசிக்கும் ஊர் இவ்வளவு பெரியதா? என்று. ஆம் அன்று அவன் பள்ளியில் ஊர்வலம் போவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மானவர்கள் பலர். அதில் அவனும் கலந்து கொண்டான். அது ஒன்றும் அவ்வளவு தூரம் இல்லை. அவன் பள்ளி இருந்த
கோதண்ட ராமர் கோவில் தெருவில் கிளம்பி, காந்தி கலைமன்றம் மற்றும் காந்தி சிலை ரவுண்டானா வழியாக பஞ்சு மார்கெட்டில் முடிவடைந்த ஊர்வலம். ஏன் இந்த ஊர்வலம் என்று அவனுக்கு தெரியவில்லை. தெரியும் அளவுக்கு விவரமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் கையில் ஏதோ வாசகம் எழுதிய பலகையை ஏந்தி போனதாக இன்றும் நினைவில் இருக்கிறது. பஞ்சு மார்கெட் அடைந்ததும் அவன் நின்ற இடத்தில் இருந்து தூரமாக ஒரு மனிதன் நேரு சிலை அருகில் யார் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை. ஒரு வேலை A A Subburaja வாக கூட இருக்கலாம். அவர் பேசுவதை அவன் கேட்கவில்லை, பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இறுதியாக அவர் புறாக்களை வானில் பறக்க விட்டார். அப்பொழுது அவன் நான் என்று இவ்வாறு சுதந்திரமாக பறக்க முடியும் என்று எண்ணிய படி வானில் பறந்த புறாவை தேடி தேடிப் பார்த்தான்.
-Sun Muga-
30-11-2013 12.31 PM

No comments:

Post a Comment