இன்று 24-11-2013 சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் கலங்கரை விலக்கம் சென்றிருந்தேன். நான் சரியாக 1 மணிக்கு தான் செல்ல முடிந்தது. ஆனால் மதியம் 1 முதல் 3 மணி வரை சாப்பாட்டு நேரம் என்பதால் உள்ளே யாரையும் அனுமதிக்கப் படவில்லை. நானும் எப்படியாவது இன்று பார்த்துவிட வேண்டும் என்று உத்தேசித்து அருகில் இருக்கும் காமராசர் சிலைக்கு அருகில் அமர்ந்து இருந்தேன். என்ன ஒரு விசாலமான பார்வை அந்த மனிதனுக்கு, சிலை ஆனாலும் அப்படி ஒரு கம்பீரமான தோற்றம். அவரை பற்றி கவிஞர்கள் எழுதிய கவிதைகள் இரண்டு இடம் பெற்றிருந்தது. அதில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை மட்டும் எனக்கு புரியும் படியாக இருந்தன. அமைதியாக அமர்ந்த படி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்ட விழிகள் வழியில் சென்ற பெண்ணையும் பார்த்தது. என்னிடமிருந்து சற்று தூரத்தில் அவளும் அவள் தோழியும் அமர்ந்து இருந்தார்கள். அதிகப்படியான ஒரு மேலோட்டமான பார்வை என் மீது படர்வதாகவே தெரிந்தது. நான் அவர்கள் பேசுவதை கவனிக்கும் போதே தெரிந்தது. யாரையோ கானத் தான் இருவரும் வந்திருக்கிறார்கள் என்று. என்னைப் பார்த்து சிரித்த அந்த பெண் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறாள் என்றே தோன்றி மறைந்தது. சற்று நேரம் ஆன பின் உங்க போன் கொஞ்சம் வேணும் ஒரு கால் பன்ன என்றபடி என் அருகே வந்தது. நானும் என் மொபைல் போனை கையில் கொடுத்தேன். சிறிது தொலைவு சென்று போன் பேசிவிட்டு வந்த பெண். ரெம்ப நன்றி என்று உரைத்தது. நான் அப்போதும் அமைதியாக என் தலையை அசைத்தேன். சரி என்று சொல்லும்படியாக. சிறுது நேரம் கழித்து அந்த பெண் நாங்கள் கடலுக்கு போகிறோம் என்று என்னிடம் சொன்னவாரு சிரித்தாள். நான் அப்பொழுதும் அமைதியாக என் தலையை மட்டும் அசைத்தேன். இதில் நான் சொல்ல வருகின்ற கருத்து என்னவென்றால் நான் ஒன்றும் அவ்வளவு அழகும் இல்லை. நல்லவனும் இல்லை. அந்த பெண்ணிற்கு என்னிடம் பேச வேண்டும் என்று தோன்றி இருக்கலாம். ஆனால் என்னால் முடியாத ஒரு காரியம். ஒரு பெண்ணிடம் பேசுவது என்பது எனக்கு மிக சிரமான ஒன்று. இன்னும் சொல்லப் போனால் என் கால் கைகளே நடுங்கிவிடும். இப்படி காலம் போக, திடிரென்று போலிஸ் காரர் ஒருவர், அங்கு விற்பனை செய்யும் பிளாட் பார கடை சிறுவனை கம்பால் அடித்த காட்சி என்னை ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் நெகிழ வைக்கவில்லை. ஆனால் ஒரு சிறுவன் மன வளர்ச்சி குன்றிய பையன், அவன் அப்பாவிடம், அப்பா அந்த பையனை அடிங்கிறாங்க அப்பா!! அப்பா!! பாவம்பா!!! என்று சொன்னவுடன் அவன் அப்பா அந்த பையன் ஓடிட்டான் டா!! அப்படின்னு சொன்னவுடனே, அதுக்கு அந்த பையன் ஆனா, அழுகிறானே அப்பா!! என்று சொன்ன படி இவன் மனம் அழுவதை என் கண்ணால் நான் கண்டேன்.
கப்பலுக்கு கரையை காட்ட கூடிய இந்த கலங்கரை விலக்கத்தை கான வந்து அதை விட மிகப் பெரிய அந்த சிறு பையனின் மனதை பார்க்க முடிந்தது ஒரு மிகப்பெரிய பொக்கிஷம். இன்றுநான் எடுத்த முடிவு சரியாக தான் இருந்திருக்கிறது அதாவது எப்படியாவது Light House பார்க்க வேண்டும் என்ற முடிவு.
-Sun Muga-
24-11-2013 18.46 PM
24-11-2013 18.46 PM
No comments:
Post a Comment