இது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. கிட்டத்தட்ட ஒரு MNC கம்பெனி மாதிரியான ஒன்னுன்னு நினைவில் வைத்துக்கொள்ளலாம். எப்பவும் போல ரெம்ப எதாற்தமா தான் ஆபிஸ் வேலையெல்லாம் போய்கிட்டு இருந்தது. திடீரென்று பார்த்தா ஒரே பேய்கள் அட்டகாசம். காலைல வந்து ஆபிஸ்-ல பார்த்த பேப்பர் எல்லாம் கீழ கிடக்கும். கம்ப்யூட்டர் எல்லாம் ஆன் ஆகி இருக்கும். டேபிள்- ல இங்க் கொட்டி இருக்கும். அப்படி இப்படின்னு டெய்லி நடந்து கிட்டு இருந்தது.
இப்படியே போக போக ஆபிஸ் -ல எல்லாரும் Complaint பண்ண ஆரம்பிச்சாங்க... இதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு ஒரு மீட்டிங். அப்பதான் ஒரு ஆளு கிண்டலா பேசாமா அந்த பேய்களையும் வேலைக்கு வச்சுகிட்டா கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்ன்னு சொல்லி சிரிச்சாரு...
MD கொஞ்சம் யோசனைக்கு பின்னாடி, உடனே அந்த பேய்கள் எல்லாம் கூப்பிட சொன்னாரு. இதோ பாருங்க இது நாங்க தொழில் பன்ற இடம் இங்க வந்து இவ்ளோ அட்டகாசம் பன்னா நாங்க என்ன பன்ன முடியும். வேனும்மானா உங்களுக்கும் இங்க வேலை போட்டுக் கொடுக்கிறேன். அதுக்கு ஏத்த சம்பளமும் கொடுக்கிறேன். ஆனா இந்த மாறி தொல்லையெல்லாம் பன்னக் கூடாது. அப்படின்னு சொன்ன உடனே அந்த பேய்களும் வேலைக்கு ஜாயின் பன்ன ஓகே சொல்லிருச்சு. அந்த நிமிடமே Appointment letter ரெடி... ஜில் ஜில், ஜகன்மோகினி , ராட்சசி, விடாது கருப்பு அப்படின்ற பெயர்களில்.. சொன்ன மாதிரி எல்லாரும் வேலைக்கு ஜாயின் பண்ணி ஒழுங்காக வேலையெல்லாம் போய்கிட்டு இருந்தது. அப்படியே ஒரு மாதம் முடிந்தது. So முதல் மாத சம்பளம். இந்த பேய்கள் எல்லாம் முதல் மாத சம்பளத்தில் ஒரு பார்ட்டி ஒன்னு ஏற்பாடு பன்னாங்க.. அப்ப தான் ஒருத்தன் வந்து MD காதுல ஏதோ சொன்னான்.
உடனே MD ரெம்ப கோபமாக, பேய்களோட டீம் லீடரை கூப்பிட்டு, இரண்டு Workers இரண்டு நாளா காணும். எனக்கென்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்குன்னு சொன்னாரு. லீடர் உடனே நிச்சயம் நாங்க இல்ல. நாங்க இப்போது எல்லாம் ரெம்ப மாறிட்டோம். அப்படி சொல்லிட்டு தன்னோடு கூட்டத்தை தனியா கூப்பிட அவங்களுக்கு உள்ள ஒரு சின்ன மீட்டிங். ஆரம்பத்திலேயே லீடர், யார் இத செய்தது. எனக்கு நல்ல தெரியும் நம்ம கூட்டத்தில் இருந்த யாரோ ஒருத்தர் தான் இத செஞ்சு இருக்கனும். உடனே ஒரு பேய் நான் தான் நேத்து நைட் ரெம்ப பசி அதான் ரெண்டு பேர சாப்பிட்டேன், அப்படின்னு ரெம்ப பயத்தோடு சொல்லுச்சு. உடனே லீடர், அடே!! எத்தனை முறை சொல்லிருக்கிறேன். எப்பவுமே வேலை பார்க்கிறவுங்க மேல கை வைக்ககூடாதுன்னு. இதுக்கு முன்னாடி எத்தனை மேனேஜர் நம்ம அடிச்சு சாப்பிட்டுருக்கிறோம். எவனாது தேடுனானா? இப்ப பாரு விஷயம் ரெம்ப பெருசா இருக்கு. சரி சரி இனிமேல் இப்படில்லாம் செய்யாதே அப்படின்னு சொல்லி மீட்டீங் முடிச்சு வைத்தது.
No comments:
Post a Comment