என் வாழ்நாளில் நான் தேடும் புத்தகம் அது. அது எங்கு இருக்கிறது, எப்படி இருக்கிறது, அதன் முழுக்கொள்கை தான் என்ன? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதனின் உருவகமும், உருவாக்கமும், உரைநடையும் எனக்கு நன்றாக தெரியும். அட்டை படத்தில் இதயம் ரத்த கோளத்தில் அன்பு என்ற அம்பால் தொங்கி கொண்டு இருக்கும். ஆம் அதிக காதல் நயத்துடன், அவளின் நளினம் மின்ன ஆரம்பிக்கும், அந்த புத்தகத்தின் முதல் பகுதி. பெண்ணே! புண்ணியம் நான் செய்தவனா? இல்லை நம் உயிர் செய்ததா? நீ அன்னையாக என்று ஆரம்பித்த கவிதையும் இடம் பெற்றிருக்கும். கண்ணீர் இருக்கும். காதலும் இருக்கும். ஊடலும் இருக்கும். தேடலும் இருக்கும். என்னை தேடி வரவில்லை காதல், உன்னை தொட வந்துவிட்டது என் காதல் என்ற தோரணையும் இதில் இருக்கும். வரியாக நண்பனின் முகம் இருக்கும். என் நாடித் துடிப்பை துடிக்க வைத்த சோகமும் இருக்கும். என் தாய், தந்தையைப் பற்றி இருக்கும். அதன் முன்னுரை என் காதலியால் கவிதையாக எழுதப்பட்டு இருக்கும்.
இது நான் என்றாவது ஒரு நாள் எழுத துடிக்கும் புத்தகம் தான்.
-Sun Muga-
30-11-2013 22.34 PM
30-11-2013 22.34 PM
No comments:
Post a Comment