ABC பாரம் ஸ்ரீ ராஜேஸ்வரி ரைஸ்மில்
இது தான் இந்த இடத்தின் பெயர் என்று எனக்கே லேட்டாக தான் தெரியும். ஆனால் இப்பொழுது Achiever Coaching Centre என்ற பலகை. இது ஒன்றும் ஒரு எழுத்துக்களால் ஆன ஒரு பலகை மாற்றம் இல்லை. அதையும் தாண்டி ஒரு தலைமுறையின் மாற்றம் என்று தான் என்னால் சொல்ல முடிகிறது.
தன் விளைநிலங்களை விற்று வித விதமான வீடுகளைகட்டி வாழ்ந்து வரும் மனிதர்களின் குழந்தைகள் தான் இன்று பயில்கின்றனர் இந்த டியூசன் செண்டரில்.
நெல்மூட்டைகள் போய்
புத்தக பை மூட்டைகள்,
நெற்கள் உளறிய களம் போய்
பிள்ளைகள் உலரும் களம்,
தனிமையில் தவிக்கும் தள்ளுவண்டி,
உம்மியை நெருப்பிற்க்கு
இறையாக்கி வென்புகையை
வெளியேற்றிய புகைக்கூடும்
இன்று வெறும் எலும்பு கூடு,
செங்கதிர் வெயிலில் ஆடிய
இடமும் இன்று வெறும்
செங்கற்கள் தான்.
காரணம்
ஒரு காலத்தின் மாற்றம்...
அப்பா,
நீங்கள் பலகை பிடித்த
தோரணை இன்றும்
என்னை தொந்தரவு
செய்கிறது...
தொட்டியில் நெல் அளந்து
போடும் போது நீங்கள்
எண்ணிய எழுத்துக்கள் (1,1, 2,2,3, 3) இன்றும் என் எண்ணங்களில்..
தொட்டியில் நனையும்
நெற்கள் கூட ஒரு பகல் தான்
நனையும் ஆனால் நீங்கள்
ஆயும் முழுதும் நனைந்து
விட்டீர்கள் வேர்வைத் துளியில்..
கொழுத்தும் வெயிலும்
கொட்டும் மழையும்
பார்த்திராத என் அப்பாவை
நான் பார்ப்பது என் அதிஷ்டம்.
பிறவி குணம் மாறாமல்
பிள்ளைகளை வழிநடத்தும்
பேச்சியம்மா ஒரு பொக்கிஷம்.
-Sun Muga-
02-11-2013 11.18 AM

No comments:
Post a Comment