இன்று நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால், என்னை கட்டி அனைத்து விடுவாயா? இல்லை கனத்த ஒலியோடு அழுதுவிடுவாயா? அது எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரை உன்னை நான் காதலிக்கிறேன். "நிலமெல்லாம் ரத்தம்" என்ற புத்தகத்தை நான் படித்து பார்த்தேன். கிட்டத்தட்ட 1000 வருட கால சரித்திரம் அது. ஆனால் என் சோகத்தை விட அது ஒன்றும் மிக பெரியதாக தெரிவில்லை. என்ன! பாலஸ்தீனர்கள் அவர்கள் பூர்வீக இடத்தை அடைய போராடுகிறார்கள். நான் என் பூவின் இதயத்தில் ஒரு சிறு இடம் அடைய போராடுகிறேன். அவர்களுக்கு என்று ஒரு தலைவன் இருக்கிறான். எனக்கு என்று என் காதல் மட்டுமே இருக்கிறது.
அதிகாலை சூரியன் போல தினம் எழுகிறேன். கனத்த ஏக்கத்தோடு உன் குரலை கேட்க கேட்க கற்பனையில் அப்படியே தூங்கி வழிகிறேன். கனவு எல்லாம் நீ என்று பொய் சொல்ல மாட்டேன். கனவில் நீ வர வேண்டும் என்று தான் உண்மையாக நான் தூங்க எத்தனிக்கிறேன். எதிர்பாராமல் என்றாவது ஒரு நாள் உன்னை சந்திக்க வேண்டும் அந்த கனவில். உன் கைகளை கோர்த்தபடி என்னை மன்னித்து விடு என்று கேட்க வேண்டும். ஏன்? எதற்கு? என்று கேட்காமல் நீ என்னை மன்னிக்க வேண்டும். என் எதிர்காலம் நீ என்று நான் எண்ணவில்லை. உனக்கு ஒரு நல்லபடியான காலம் அமைய வேண்டும் என்றே நினைக்கிறேன். அதற்க்காக தான் நானும் காத்திருக்கிறேன். இன்று என் கண் முன் தெரியும் மனிதர்கள் கூட ஏளனம் செய்கிறார்கள், எப்போது கல்யாணம் என்று? காதலின் அருமை பெருமை தெரியாமல். கண்ணீர் வருகிறது. கண்களிலே நீர் வராமல். அது எப்படி சாத்தியம் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் வருகிறது. இதோ பார்!! அதை உள்ளங்கையில் வாங்கிய ஈரம் கைகளில். உன்னை காயப்படுத்தி என் காதலை வெளிப்படுத்த விரும்பவில்லை. விதைகளை என்றோ நான் விதைத்துவிட்டேன். அது விடியும் போது முளைக்கிறதா? இல்லை என் வாழ்க்கை முடியும் போதுமுளைக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. அதற்கு உரமாக என் காதலையும் தூவி விட்டேன். இன்று துயரப்படுகிறேன். தூக்கம் இல்லாமல். உன் துணை இல்லாமல். ஒரு துணிவு இல்லாமல். தூய்மையான உள்ளம் கொண்ட காதல் நீ! நீ வாழ்க! நீ வளர வேண்டும்.
நான் ஒன்றும் நல்லவன் இல்லை. என்னை நல்லவன் என்று சொல்லுவர்களும் நல்லவர்கள் இல்லை. ஏன் என்று அலசி ஆராய நேரமில்லை. ஆனாலும் நான் நல்லவன் இல்லை.
நாளை என்றோ ஒரு நாள் நீ இந்த வரிகளை நிச்சயமாக படிப்பாய் என்று எனக்கு தெரியும். மற்றவர்கள் படிப்பதற்கும் நீ படிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அவர்களுக்கு இதில் உள்ள எழுத்து பிழைகள் தெரியலாம். ஆனால் உனக்கு என் வாழ்க்கையிலும், மனதிலும் ஒரு சிறு காதல் இருப்பதாகவே தெரியும்.
வெகு காலம் இருக்க விருப்பம் இல்லை என் உயிரே!! இப்பொழுது இந்தகனம் இந்த இரவே கூட முடிந்து விட்டால் நல்லது என்று தான் தோன்றுகிறது.
-Sun Muga-
24.11.2013 00.00 AM
24.11.2013 00.00 AM
No comments:
Post a Comment