November 15, 2013

இதயம் 2 இதயம்

ஒரு சிறு கற்பனை நான் காதலனாக..
அவளின் பெயர் அநேகமாக காதலியாக தான் இருக்க முடியும். ஏன் என்றால் என் கண்களுக்கு அவள் அழகாக தெரிகிறாள். அவளின் குரல் மட்டுமே என் காதுகளுக்கு கேட்கிறது. அது மட்டும் அல்ல அவளின் பார்வை அவ்வப்போது என்னையே தொட்டுப் பார்க்கிறது. அதனால் தான் அவளிடம் அவள் பெயரையே கேட்கவில்லை.
காதலி ஒரு நாள் தனியாக வந்தாள். அதாவது தனியாக வருவதற்கு என்று அன்று தயாராகி வந்தாள். என்னைப் பார்த்து சிரித்தாள். இது என்ன சிரிப்பு? சிரிப்புகளிலே இது தான் சிறந்ததோ!!! யோசிக்கவில்லை பேசிக் கொண்டாள் விழியால். மெல்லப் பேசு என்கிறது அவளது இதழ். நாளை பார்க்கலாம் என்கிறது கால்விரல். தள்ளிப் போகாதே என்கிறது கைவிரல். இரண்டிற்கும் வாக்குவாதம். கண்கள் காதலில் தவித்து, இறுதியில் கால் விரல் ஜெயித்தது. உன்னை நாளை பார்த்துக் கொள்கிறேன் என்று கோபத்தோடு உஷ்ணம் ஏற சென்றது கைவிரல்.
இரவு நெருங்க நெருங்க அப்படி ஒரு படபடப்பு இதயத்தில். என் காதலி என்னை தான் நினைத்துக் கொண்டு இருப்பாளோ என்று? அய்யோ இல்லை இல்லை ஏங்கிக் கொண்டு இருப்பாளோ? என்று. அங்கே காதலியும் கண்களை மூடினால், இதயத்தின் ஓசை சத்தம் மெதுவாக குறைந்தது. ஓ!! அவள் மெல்ல பேசுகிறாள் போல!! வீட்டில் அப்பா, அம்மாவிற்கு கேட்கும் இல்லையா அதான்.. மெல்லச் சிரித்தாள் கண்களை மூடியபடி, அவன் கண்களை பார்த்து, மறுகணம் சிரித்துக் கொண்டே கேட்டாள், ஏன் "கை" நடுங்குகிறது என்று. ஒரு பயம். ஆம்பளைக்கு என்ன பயம்? உன் காதில் சொல்ல வேண்டும். "ம்ம்ம்" சொல்லு. பயம் என்று நான் சொன்னால் என்னை கட்டி அனைத்துவிடுவாயா? இல்லையா? ஏன் இந்த கேள்வி இப்போது? பதில் வேண்டும். இப்போது இல்லை. திருமணத்திற்கு பின் வேணும்னா!! யோசிக்கலாம். ஓ!!! அப்படியா? உனக்கு பயமாக இல்லையா? ஏன்? என்னோடு தனியாக பேசுவதற்கு. நான் தனியாக பேசவில்லையே? உன்னோடு தானே பேசுகிறேன். என்ன காமெடியா? இல்லை என் அன்புக் காதலா!! நான் என் காதலனோடு, என் காதலோடு தான் பேசுகிறேன் அப்புறம் என்ன? அது சரி. நாளை எங்கு சந்திக்கலாம்? நாளை என் வீட்டில் யாருமே இல்ல.. நீ இங்கேயே வந்துரு... ஏய் என்ன சொன்ன? உங்க வீட்டுக்கா?? ஆமாம் என்றாய் சந்தோஷத்தோடு...
மறுநாள் என் பட்டாம்பூச்சியின் கூட்டுக்குள் சென்றேன். என்ன ஒரு அழகு. அவளும் அவள் இருப்பதால் அந்த அறையும். அதிகாலை சூரியன் ஒளிப் பட்டு தெரித்த ஒளிக்கதிர் இன்னும் இருக்கும் போல அப்படி ஒரு பிரகாசம் அந்த அறையில். என்னைப் பார்த்து ஒரு புன்னகை. கை கோர்த்தப் படி "ம்ம்ம்" எப்படி இருக்கு? என்றாள் அவள். ரெம்ப மிருதுவாக இருக்கு என்றேன். ஏய்!! என்ன? என்றாள். உன் கை விரல் என்றேன். இப்பொழுது கண்கள் சிரித்தது. மெல்ல மெல்ல அவள் மார்பும் ஒரு கனத்த சிரிப்போடு என்னை நோக்கி சரிந்தது.
சரி ,சரி முதல் முறை நம்ம வீட்டுக்கு வந்துருக்க. என்ன வேண்டும் என்று கேட்டாள். ஒரே ஒரு முறை கண்களை மூடியபடி உன் கைவிரல்களை தீண்ட வேண்டும் என்றேன். ஏன் என்றாள். நம் காதலின் மென்மையை கை விரலும், கண்களும் ஒரு சேர அனுபவிக்க வேண்டும் என்றேன்.
அந்த நொடி உன்னோடு
நான் எழுதிய வரிகள் ;
கண் அல்ல உனக்கு
இருப்பது பெண்ணே!
ஒரு காகிதம்
நான்
சிந்தித்த கவிதைகள்
அனைத்தும் அதில்
பிரதிபலிக்கப்பட்டுள்ளது..
உன் மோதிர விரலை
தடவிப் பார்த்தபோதே
இத்தனை மோகம்
என்றால்?
இன்னும் உன்னுள்
எத்தனை?????
-Sun Muga-
15-11-2013 23.50 PM

No comments:

Post a Comment