November 17, 2013

First Love

என்னவள் பெயர் ;

ஒரு பூவை எந்த பக்கம்
இருந்து பார்த்தாலும்
அழகு தான்,
அதுபோல,
முன்னும் பின்னுமாக
அழகான பெயர்
அவளைப் போன்றே!!!

அவள் விரலின் ஏக்கம்;

அவள் விரல் நுனியில்
கண்ணீரை கண்டேன்,
அவள் இதழை விட்டு
பிரியும் தருணத்தில்...

அழகான இமை;

அவள் இமைக்கும்
நொடியை கூட
எண்ணி விடலாம்,
ஆனால் அவள் இமை
இசைக்கும் வார்த்தையை
மட்டும் கணக்கிட முடியாது..

என்னுடையவள் உடை;

அவள் பாரம்பரிய
உடையை கூட
உடுத்திக் கொள்ள
கூச்சப் படுகிறாள்,
எங்கே கட்டி அனைத்து
விடுமோ என்று,
அது என் மேனியைப்
போல் கருமை
என்பதால்...

உயிர்;

என் உயிர் அவள்
என்று என்னால்
வர்ணிக்க முடியவில்லை,
ஏன் என்றால்,
என்றோ ஒரு
நாள் பிரிந்து விடும்
என்பதால்...

கடிதம்;

நடுங்கிய கையோடு எழுதினேன்,
என் முதல் காதல் கடிதம்.
என்ன எழுதுவது
என்று தெரியாமல்,
இன்றும் தெரியவில்லை,
என்ன எழுதினேன் என்று!!

கனவு;

என் கண்கள் கனவுகள்
நிறைந்தது,
மனதில் நினைவுகள்
மலர்கிறது,
நினைவுகளை திரும்பி
பார்க்கும் போது தான்
கண்ணீர் அலையாக
வருகிறது.
என் கண்ணீர் அலைகள்
அவள் தங்கப் பாதங்களை
தழுவ வேண்டும் என்று
பலமுறை படையெடுத்து
தோற்றுப்போய் திரும்புகிறது
அவள் கரையில்
நிற்கும்போது..

என் காதல்;

காதல் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடினேன்,
அது "நீ" மட்டுமாக
பிரதிபலிக்கிறது.
"நீ" என்ற சொல் "நான்"
ஆக மட்டுமே இருக்கிறது
இன்று வரை..
"நீ" = காதல்

கல்லூரிக் காலம்;

விடிந்தால் உன்னைக் கான,
சூரியனை விரல் பிடித்து
அழைத்து வந்தேன்
விடியல்காக...

உன்னைப் படிக்க தினமும்
வருகிறேன் கல்லூரிக்கு
என் பெற்றோரை
ஏமாற்றிவிட்டு..

நீ சிரித்தாலும் முரைத்தாலும்
சிரிக்கிறேன் நான்..

திரும்பி திரும்பி பார்க்கிறேன்
நீ திரும்பிய இடம் எல்லாம்
என்றோ ஒரு நாள்
நீ என்னை
திரும்பி பார்பாய் என்று..

நீ நடந்துபோன பாதையை
பார்க்கிறேன் உன்
பாதச் சுவடை விட என்
பாதச் சுவடு அதிகமாக
தெரிகிறது உனக்காக
காத்திருந்தால் என்னவோ!

எத்தனை பனிக்கட்டிகள்
உருகினவோ
உனக்காக காத்திருந்த
வேளையில் Ice கடையில்..

பேருந்தில் நீ தடுமாறி
விழுந்ததால் நானும்
தடுமாறினேன் காதலில்
அந்நொடி முதல்..

தனிமைச் சிறையில்
ஆயுள் தண்டனை
கைதியாக அலைகிறது
மனது உன்னை
காதலித்த குற்றத்திற்காக ...

கொட்டும் மழையை
அன்று தான் ரசித்தேன்
மழைக்காக நீ
ஒதுங்கிய சிறு நொடி
என் கண்கள் பட்ட
சந்தோஷத்தில்..

நான் செய்த சாதனை
நமக்கு மட்டுமே தெரியும்
உன்னை மட்டும்
படித்து பாஸ் ஆனேன்
DMOP

வெற்றுக் காகிதத்தில்
கவிதை எழுதினேன்
தேர்வின் போது..

என் பேனாவில் கண்ணீர்
விட்டு எழுதுகிறேன்
என் கவிதையைப் பற்றி
கவிதை,
எங்கே "மை" க்கு
பற்றாக்குறை ஆகிவிடும்
என்பதால்..

உன்னை பின்னோக்கி
வந்த கால்கள்
இன்று பின்னோக்கியே
செல்கிறது உன்
சந்தோஷத்திற்காக..

வாழும் வாழ்க்கை
உன்னோடு இல்லை
என்றாலும் வாழ்ந்த வாழ்க்கை
உன்னோடு மட்டுமே!!
என் கண்களோடு "நீ"
இருப்பதால்
என்னோடு என் "உயிர்"
இருக்கிறது..

இந்த உயிர் மூச்சும்
திகைத்தது
உன் அழகை கண்டு,
உன் வீட்டுத் தெருமுனையில்
அந்நொடி என்னையும்
அறியாமல்
உன் செங்கருங் கூந்தல்
வாசனையை சுவாசித்து
விட்டேன்,
என்னை மன்னித்து விடு

என்னையும் அறியாமல்
என் கருவிழி உன்
நெஞ்சை வருடி
இருந்தால் என்னை
மன்னித்து விடு..

அவ்வப்போது என் கண்ணீர்
துளிகளுக்கும் விடை
கொடுக்கிறேன்
என்னவள் என்னோடு தான்
இருக்கிறாள் என்று!!

என் இதயத்தில் வலி
வழியும் போதெல்லாம்
விழி வழி உன்
இதழ்களை கவ்விக்
கொள்கிறேன்..
வலியும் வெட்கப்பட்டு
ஓடி விடுகிறது...

விழி மூடி நன்றாக
நான் உறங்குகிறேன்
கரு விழியாக
என்னுள் நீ
இருப்பதால்..

உன்னைப் போல்
பிணிக்கும்(நோய்க்கும்)
என்னை பிடிக்கவில்லையாம்
உன்னை நினைத்து
நினைத்து சிரித்துக்
கொண்டே இருப்பதால்..

கருமையாக தெரியும்
ஒவியம் "நீ"
உடையோடு இருப்பதால்
உன் உடையின் ஒரு
நூலாக பிறந்து இருந்தால்
கூட சற்று அதிகமாக
நேசித்து இருப்பாய்..

வளர் பிறையான உன்
முகத்தை கான
சூரியனாக காத்திருக்கிறேன்
ஆனால் "நீ" என் விழியின்
ஒளி மீது தான்
நடந்து செல்கிறாய்! தினமும்

-Sun Muga-
2010

No comments:

Post a Comment