November 29, 2013

தொடர் கதை

வழக்கம்போல இன்று சென்னையில் இருந்து தன் சொந்த ஊருக்கு வந்திருந்தான் அவன். தன் பெற்றோரை கானப் போகிறான் என்று அலுவலக நண்பர்கள் நினைத்துகொள்ள, தன் நண்பனின் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான் என்று அவன் பெற்றோர் நினைத்துக் கொள்ள, ஏதோ சும்மா லீவ் போட்டு வந்திருக்கிறான் என்று அவன் நண்பர்கள் நினைத்துக் கொள்ள, அவன் எதற்காக வந்து இறங்கி இருக்கிறான் என்று அவனுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது.
ஆம் அவன் வழக்கம் போல அவளை கான மட்டுமே வந்து இருக்கிறான். அவள்? அவள் யார்?  அவள் என்றால் அவனுக்கு தனி விருப்பம். இன்னும் சொல்லப் போனால்
அவள் அவனுக்கான ஒரு தனி உலகம். அவள் மென்மையானவள். அழகானவள். அறிவுள்ளவள். அவன் அவளை மிகவும் நேசிக்கிறான். ஆனால் அவளுக்கு அது தெரியாது. அவனால் இது வரை சொல்லக் கூடிய தைரியம் இல்லை. அதை விட அவனுக்கு சொல்லுவதற்க்கான சந்தர்ப்பம் அமையவில்லை.
இன்று அவளை கான தான் காத்திருக்கிறான். அதாவது ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும் போது அவளை அவளுக்கு தெரியாமல் பார்ப்பது, அவள் வேலை முடிந்து வரும் போது, அவனுக்கு ஒரு வாடிக்கையான ஒன்று. இதில் அவன் அவளை ஏவு பார்க்கிறான் என்று நீங்கள் என்ன வேண்டாம். அவனுக்கு தெரிந்த வரை அது தான் காதல்.  அவளிடம் அவனுக்கு பேசுவதற்கான சூழ்நிலைகள் மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. அதனால் தான் பார்க்கவாது முடிகிறதே என்று எண்ணி சந்தோஷம் பட்டுக் கொண்டான். ஒரு முறை கூட தவறியதில்லை. அவளை காணமல் அவனால் இருக்க முடிந்ததாக தெரியவில்லை.
ஒவ்வொரு முறை அவன் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒவ்வொரு காரணம். அதாவது நண்பனை பார்க்க போறேன் அம்மா!! கடைக்கு போய் விட்டு வருகிறேன் அப்பா!! வெளியே போய் விட்டு வருகிறேன் அக்கா! என்று. இன்று ATM போய்  விட்டு வருகிறேன் என்று. இப்படி ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது மிக பெரிய வேலை.
ஒரு நாள் அவள் கீரின் கலர் சுடிதார் போட்டுக் கொண்டு வந்திருந்தாள். என்ன ஒரு அழகு அவள் உடுத்திய பின் அந்த உடை கூட.
இன்றும் அவன் காத்திருந்தான், மணி சரியாக 6.05 அவள் வரவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தபடி அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.
அவனுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை அவளுக்கு இன்று நிச்சியதார்த்தம் என்று..
அவன் மறுமுறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடி கிளம்பிசென்றான் சென்னைக்கு..
-Sun Muga -
29-11-2013 22.35 PM

No comments:

Post a Comment