ஏதோ ஒன்று என்னை அழைக்கிறது. அதிகம் நேரம் எடுத்து கொள்ளாதே என்று உரைக்கிறது. உறக்கம் வரவில்லை. வருவதற்கு உண்டான சாத்தியமும் இல்லை. என் உறைவிடம் முழுதும் உறவினர்கள் நினைவுகள். நிம்மதி இல்லை. ஆம் நித்தம் நிம்மதியான உலகம் இல்லை. உறங்க மறுக்கும் விழிக்கும் ஏதோவொரு ஏக்கம். எண்ணில் அடங்கா ஏக்கம். கண்களில் கண்ணீரும் இல்லை. என் உடல் வெந்து எரியூட்டப்பட நாள் நெருங்கிவிட்டது. அதை தான் என் உயிரும் எதிர்ப் பார்த்து காத்திருக்கிறது.
அது, மானை வேட்டையாட காத்திருக்கும் சிங்கம் போல, மாமிசை வாடையை தேடி அலையும் ஒரு நரியை போல, பணத்தை தேடும் ஒரு அரசியல் வாதியை போல, மரத்தை தேடும் ஒரு குரங்கை போல, இறை தேடும் ஒரு பறவையை போல...
சீக்கிரம் உன்னை நெருக்கி விடம் ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன் என் கல்லறையே!!!
-Sun Muga-
23-11-2013 23.17 PM
23-11-2013 23.17 PM
No comments:
Post a Comment