August 27, 2015

2015 கவிதைகள் 1191 to 1200

தூறலிடும்
இரவெல்லாம்
தூக்கம் பாதியாக
ஏக்கம் மீதியாக கழிகிறது
ஒரு துளியும்
மனதை
குளிர்விக்காத போது...     1191

கண்ணீர் விடுவதற்கு
என் மீது உள்ள
வெறுப்பும் காரணம்
விடாமல் இருப்பதற்கு
உன் மீதான
காதலும் காரணம்..     1192

அந்தரங்கமான இரவுகள்
எல்லாம்
அழகாய் ஒளியூட்டும்
நம்
இரவு பாதைகளுக்கு....    1193

நிலவில் தோன்றிய
வெளிச்சம்
இவ்வுலகை காட்டும்
நிலவாய்
இவ் உயிரை காட்டும்
வெளிச்சம் நீ...          1194

பகலின்றி
இவ்வுலகம் போனால்
இரவில்
உனக்கொரு முத்தம்
ஏன்
இரவுக்கே முத்தம்!!    1195

காமத்தின்
கயல்விழி அழகு
கண்களை மூடி
இவ்விரவையும்
இவ்வுடலையும்
ரசிக்கும் போது...     1196

மண்ணில் வளர்ந்து
இப்பெண்ணில்
வாசம் வீசும்
இப்பூவை
நானும் கையேந்தி
பரித்தேன்
பாவையின் வெட்கத்தில்
சுரக்கும் தேனை
என்
கைவிரல்களில்
தாங்கி பிடித்த படி...      1197

படுக்கை விரிப்பில்
சிதறிக் கிடக்கும்
கனவுகளை எல்லாம்
எனக்காகவும்
நான்
உயிர் வாழ்வதற்காகவும்
அள்ளி சேர்த்து
கனவு காண்கிறேன்
இரவை கடப்பதற்கும்
இறப்பை நெருங்குவதற்கும்..   1198

இரவை கடக்க
உன் இதழ் வேண்டும்
அதிலும்
அழுத்தமாக
ஒர் முத்தம் வேண்டும்..    1199

மூச்சுக் காற்றில்
பெருகும்
கடலலை
உன் முத்தம்
முடிவுறா
இரவின் முதல்
யுத்தம் உன்னோடு
குருதியாய்
வேர்வை வடிய
வெற்றி
நம் இதழ்களுக்கு மட்டும்..   1200

August 23, 2015

2015 கவிதைகள் 1181 to 1190

எப்படியேனும்
உன்னை நினைத்துக்
கொள்வேன்
இடி,
காற்று,
மழை,
இதற்கு அப்பாற்பட்ட
இசையாய்
உன் இதயம்
என்னுள்
இசைக்கும் போது...      1181

என்
காதல் பாவையே
பைந்தமிழ்
கற்றுக் கொள்ள
ஆசையடி
அதன் பயனாய்
உனக்கொரு
கவிதை எழுத ....      1182

என்
உள் உணர்வில்
எப்பொழுதும்
உன் ஆதிக்கம்
அதிகப்படியாய்
உன் முத்தத்தின்
ஏக்கம்....          1183

உன்
சிறு மெளனமும்
நெடுநேர
முத்தத்திற்கு சமம்
உன்
நெடுநேர
முத்தம்
ஒரு முழு இரவின்
இன்னொரு இனம்....    1184

பொருள் யாதும்
இல்லாத
இக்கவிதையில்
பொருளும்
உயிருமாய்
இருக்கிறது
உன் காதல்...       1185

ஆயுளுக்கும்
செய்யுள் எழுதி
என் காதலின்
செய்தியை
வெளியிடுவேன்
ஒற்றைக் கவிதையாய்..    1186

சோற்றுக்கு
அழைந்த போதும்
சோர்வடையா
சிந்தனையில்
வளர்கிறது
உன் காதல்...   1187

நல் தமிழை
நாடி வந்தேன்
என் சொல்லின்
அர்த்தம் புரிய

என் சொல்லின்
(மெளனத்தின்)
அர்த்தம் புரிந்து
இன்றோ
பூக்கிறது
ஓர் இதய மலர்...    1188

உன் பிரிவில்
சாத்தியங்கள் அற்று
நான் வாழ்கிறேன்
உன் நினைவால்
மட்டுமே அன்பே....    1189

அமைதியாக
திரும்பி செல்லும்
கடல் அலையை போல தான்
உன் முத்தம் பெற்ற
சந்தோசத்தில்
மெளனமாக செல்கிறேன்
என் வாழ்க்கைக்குள்...   1190

2015 கவிதைகள் 1171 to 1180

பெருங்கடலின்
ஆற்றல்
கடல் அலைகளில்
தெரிகிறது

பெருங்காற்றின்
ஆற்றல்
புயலில் தெரிகிறது

பெண்ணே!
உன் காதலின்
ஆற்றல்
உன் பிரிவில் தான்
எனக்கு புரிகிறது...       1171

நீ
பேசித் தின்ற
காலத்தை எல்லாம்
இப்பொழுது
என் காதலின்
பசிக்காக
தேடிக் கொண்டு இருக்கிறேன்.. 1172

இரவின்
இசையே இன்பம்
அதிலும்
தேநீரும்
தேன் தரும்
உன் இதழின் இசையும்
இந்த
காதலுக்கு இன்னும் இன்பம்... 1173

நிற்பது என்றால்
உன்னோடு
நிற்க வேண்டும்
நடப்பது என்றால்
உன்னோடு
நடக்க வேண்டும்
பறப்பது என்றால்
உன்னோடு
பறக்க வேண்டும்
என் உயிரே!!         1174

ஆடிக் காற்றில்
அலைமோதும்
என் எண்ணங்களில்
எப்பொழுதும்
அமைதியாய்
என்னை
உருக்குகிறது
உன் இதழ்.....    1175

நெருப்பிட்ட
காட்டிற்குள்
காற்றில் படரும்
ஒரு தீயை போல்
உன் காதல்
கவிதைகள்
என்னுள்
பரவி எரிகிறது...  1176

மனம்
முழுதும்
உன் காதலின் சுமை(பளு)
கண்ணீராய்
கரைவதிலும்
ஓர் சுகம் இருக்கத்தான்
செய்கிறது...   1177

நான் வெளி செல்லும்
எந்த இடத்திலும்
உன் வீட்டின்
இருப்பிடத்தை
கடந்து
எப்படியேனும்
என்னுள் கலந்து விட
தான் செய்கிறாய்...    1178

மீன்களை காட்டி
ஏமாற்றிக் கொண்டு
இருக்கிறாய்
நம் குழந்தைக்கு
நான்
உன் கண்களைப்
பார்த்து
என்னையே
மாற்றிக் கொண்டு இருக்கிறேன்...     1179

என் ஜனனத்தின்
அர்த்தம் அறிய
உன்னையே
மனனம் செய்கிறேன்
என் அழகே!!      1180

2015 கவிதைகள் 1171 to 1180

பெருங்கடலின்
ஆற்றல்
கடல் அலைகளில்
தெரிகிறது

பெருங்காற்றின்
ஆற்றல்
புயலில் தெரிகிறது

பெண்ணே!
உன் காதலின்
ஆற்றல்
உன் பிரிவில் தான்
எனக்கு புரிகிறது...       1171

நீ
பேசித் தின்ற
காலத்தை எல்லாம்
இப்பொழுது
என் காதலின்
பசிக்காக
தேடிக் கொண்டு இருக்கிறேன்.. 1172

இரவின்
இசையே இன்பம்
அதிலும்
தேநீரும்
தேன் தரும்
உன் இதழின் இசையும்
இந்த
காதலுக்கு இன்னும் இன்பம்... 1173

நிற்பது என்றால்
உன்னோடு
நிற்க வேண்டும்
நடப்பது என்றால்
உன்னோடு
நடக்க வேண்டும்
பறப்பது என்றால்
உன்னோடு
பறக்க வேண்டும்
என் உயிரே!!         1174

ஆடிக் காற்றில்
அலைமோதும்
என் எண்ணங்களில்
எப்பொழுதும்
அமைதியாய்
என்னை
உருக்குகிறது
உன் இதழ்.....    1175

நெருப்பிட்ட
காட்டிற்குள்
காற்றில் படரும்
ஒரு தீயை போல்
உன் காதல்
கவிதைகள்
என்னுள்
பரவி எரிகிறது...  1176

மனம்
முழுதும்
உன் காதலின் சுமை(பளு)
கண்ணீராய்
கரைவதிலும்
ஓர் சுகம் இருக்கத்தான்
செய்கிறது...   1177

நான் வெளி செல்லும்
எந்த இடத்திலும்
உன் வீட்டின்
இருப்பிடத்தை
கடந்து
எப்படியேனும்
என்னுள் கலந்து விட
தான் செய்கிறாய்...    1178

மீன்களை காட்டி
ஏமாற்றிக் கொண்டு
இருக்கிறாய்
நம் குழந்தைக்கு
நான்
உன் கண்களைப்
பார்த்து
என்னையே
மாற்றிக் கொண்டு இருக்கிறேன்...     1179

என் ஜனனத்தின்
அர்த்தம் அறிய
உன்னையே
மனனம் செய்கிறேன்
என் அழகே!!      1180

2015 கவிதைகள் 1161 to 1170

வெள்ளை
சேலைக்குள்
வீற்றிருக்கும்
செந்தாமரை மலரே!
உன் நிறம்
காண காத்திருக்கிறேன்
கண்களால் அல்ல
காதலால்
என் உயிரே!!       1161

இரவே!
ஏன் இன்னும்
காத்திருக்கிறாய்
வெண் நிற
நிலவாய்
என்னவளை
எனக்கு காட்ட!
வெண் நிற
நட்சத்திரமாய்
என்னவளின்
முத்தங்களை கூட்ட!!      1162

அங்கும்
இங்குமாய்
அலைந்து திரியும்
என் இரவின்
கனவுகளில்
உன் கண் கண்டு
வியந்து நிற்கிறேன்
இது கனவா!
நினவா என்று!!       1163

வண்ணங்கள் தான்
ஆடை
வண்ணமிகு பட்டாம்பூச்சிக்கு
உனக்கு
உன் காதலோ!
என் காதலியே!!      1164

உன் இடை
என்பது
இயற்கை போல
எப்போதும் மெளனமாக
இருக்கிறது
என்னையும் மெளனம்
காக்க வைக்கிறது...    1165

எப்படி
உன்னைப் பார்ப்பேன்
என்ற
என் கேள்விகளுக்கு
கண்களை மூடித் தான்
என்று
கண் சிமிட்டி பதில்
சொல்லுகிறது
உன் உணர்வின் நிழல்...  1166

இந்த இரவின்
கண்ணீர்
எதைத் தேடி
செல்லுகிறது!
உன் காதலால்
என் காமத்தை மீறி...   1167

என் எதிரே
நீ நிற்கும் போது
பேச முடிவதில்லை
உன்னோடு
நான்
பேசிக் கொள்ளும் போது
எதிரே
நீ நிற்பதில்லை....    1168

நீ
பார்த்த பிறகு
கண்ணாடியும்
அழகாக மாறிவிடுகிறது
நம் வீட்டில்.....         1169

உன்னை
நான் ரசிப்பதும்
உன்னோடு
நான் ரசிப்பதும்
ரகசியமாய்
இருக்கட்டும்
இன்னும்
இன்னும்
அதனுள்
ரகசியமாய்....   1170

தோசை

அரிசி மாவை
அளந்து எடுத்து
வட்ட நிலவை
காரிருள் நிரப்பிய
கல்லில் ஊற்றி
வேர்வை வடிய
என்னையும்
எண்ணெயும் ஊற்றி
எரியும் அடுப்பில்
வெட்கம் எரித்து
இன்னும்
இன்னும்
வேண்டுமென்ற
தோசை தான்
இப்போது
என் இதழின் ஆசை,

என் இதழின்
கனவுகளை
பொடியாக்கி
அவ்விதழின் வழியே
தொட்டுக் கொள்ளவும் ஆசை..

-SunMuga-
23-08-2015 21.22 PM

ஒவியம்

அழகே!

உன் ஒவியத்தின்
வர்ணம்
என்னவோ
கருமை தான்

உன் கருவிழி போல..

22-08-2015 21.50 PM

விடுதலை

விடிவு
என்பது
இரவுக்கு விடுதலை!

விடுதலை என்பது?

அதிகாலைக்கு முன்
இறப்பது எனக்கு...

-SunMuga-
22-08-2015 21.00PM

இதயத்தின் வலி

என்
இதயத்தின் வலி
இப்பொழுது
மாறியிருக்கலாம்

அதன்
வழியெங்கும்

உன்
காதலின் ஓசைகளும்

என்
பாவத்தின் பாஷைகளுமே

எனக்கு
ஓசையாய் கேட்கிறது..

-SunMuga-
22-08-2015 20.55 PM

புத்தகம்

தூசிகள் படிந்து
பழுப்பேறிய
புத்தகத்தில்
ஒரு
தூமைச் சொட்டின்
வாசம் வீசுகிறது

ஆம்
அப் பெண்ணின்
கவிதையின் வழி..

-SunMuga-
22-08-2015 20.51 PM

மழையும்-அக்காவும்

நேரம் பார்த்து
ரேடியோவின்
செய்தி சேகரித்து
மழை பொழியும்
காலம் சொல்ல
அக்கா
இல்லாத போது

தீயிட்டு
நெல் அவிக்கும் போது
மழை பெய்தால்

மழையில்
உம்மியும்
தென்னம் மட்டையும்
நனையும்...

பகல் நேர
கதிரவன் வீசாமல்
மழை பெய்தால்

மழையில்
நெல் நனையும்..

இப்பொழுது
மழை பெய்கிறது,
அதன்
நினைவுகள்
மட்டுமே நனைகின்றன...

-SunMuga-
23-08-2015 18.22 PM

பசி

பசியிலிருந்து
தப்பித்துக் கொள்ள
ஒரு வழியும்
இல்லை
என்ற யோசனையின்
முடிவில்
இன்னொரு வழியை
கண்டு பிடித்தேன்
பசியைப் பற்றிய
ஒரு கவிதை
வாசிப்பது என்று...

நானும்
வாசிக்க ஆரம்பித்தேன்
பசியிலிருந்து தப்பிக்க
தூக்கம்
மிக உசிதம்
என்ற மியூசியம் கவிதையை..

-SunMuga-
23-08-2015 18.28 PM

நெற்களம்

பல நிலவுகளும்
பல நிகழ்வுகளும்
கடந்த போதும்
அன்று
நான்
கண் விழித்த போது
சிமெண்ட் தரையெங்கும்
நெற்கள் உலர்ந்து
கொண்டு இருந்தது,

நெற்கள் மீது
என்
அப்பாவின்
காலடி தடங்களும்
பாதத்தின் ரேகைகளும்
இரு கோடுகளாய்
இன்னும்
இன்னும்
பல கோடுகளாய்
பரவி கிடந்தது..

எங்கிருந்தோ வந்த
பறவையின் பசியை
சிதறிய
அந்த
நெற்கள்
தீர்த்துக் கொண்டு இருந்தது..

ஈரச் சாக்கில்
இன்னும்
ஒர் நெற் குவியல்
இரவின் ஆவிகளை
பரப்பிக் கொண்டு இருந்தது..

வெயில் ஏற ஏற
வேர்வையின்
வாசத்தில் கூட
அந்த
நெல்லில் வாசனைகள்
கலந்து வீசிக்
கொண்டு இருந்தது...

பாரங்கள் ஏதும் அற்று
தள்ளு வண்டி
சாலையில்
வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருந்தது..

இரு மாடி கட்டிடம்
வந்த பிறகு
நெல்லிற்கு பதில்
வெறும்
கட்டிடத்தின் நிழல்
மட்டுமே உலர்ந்து
கொண்டு இருக்கிறது....

-SunMuga-
23-08-2015 18.18 PM

உளி

என் கனவை
உடைக்க
ஓர் உளி வேண்டும்

உளியின்
கூர் ஒளியாய்
உன் கண்களும்
கூர் ஒலியாய்
உன் குரலும்
வேண்டும்.....

நிஜம்

நிஜமே நிஜமா!
நிஜமா! நீ தான்
நிஜமே நீயா!
நீயும் நிஜமாய்!
நீ நிஜமாய் நிஜமே!
நிஜத்தின் நிஜமே நீ!

August 22, 2015

உறவு

வார்த்தைகளோடும்
அதன்
படிமங்களோடும்
நான்
உறவு கொள்ளும் போது
கவிதை பிறக்கிறது

அதன்
முடிவில்
என்னுள் இருக்கும்
நான்
இறந்த போதும்
கவிதை வாழ்கிறது

மறுஜென்மம்
எடுத்து
அதை நான்
மீண்டும்
வாசிக்கும்போது
என்னை
அது
வாழ வைக்கிறது..

-SunMuga-
22-08-2015 11.54 PM

நினைவு

உன்னை நினைத்து
அழுவதற்கு என்றே
எனக்காய்
வருகிறதோ!

ஒவ்வொரு இரவும்
உன்
ஒவ்வொரு நினைவும்..

-SunMuga-
22-08-2015  23.18 PM

August 19, 2015

2015 கவிதைகள் 1151 to 1160

கடவுளின் ஆலயத்தில்
அன்பின் சொற்களே
பரவிக் கிடக்கும்
நம் காதலின்
ஆலயத்தில்
நம் கவிதைகளே
நிரம்பி இருக்கும்...      1151

செக்கிழுத்த
செம்மலை விட
உன்னிலே
சொக்கி சொக்கி
சுற்றி வருகிறது
என் காதலின் உலகம்..   1152

அறையொன்றில்
உன்னையே எதிர்பார்த்து
காத்திருந்தேன்
நீயோ!
கவிதையாக
என்னுள்
என்னுள்
நிறைந்து கொண்டே
இருக்கிறாய்...       1153

என்
கனவுச் சிறகுகளை
விரித்து
உன் கனவோடு
நானும் பறக்கிறேன்
அழியா
காதலின் இடம் தேடி...     1154

கனவாக
காதலாக
நீ என்னை சுற்றும் போது
நான்
உன் இதழை சுற்றுகிறேன்
பிரிவின்
துன்பத்தின்
எதிர்வினையாக
இன்பம்
எப்போது கிட்டும்
என்ற
எதிர்பார்ப்பில்...   1155

நான்
என்ற போக்கில்
நான் போக விரும்பவில்லை
நீ இருக்கிறாய்
என்ற சாக்கில்
நான்
வாழ விரும்புகிறேன்...    1156

சொல்லாய்
உன் கண்களை
தேர்ந்தெடுத்தேன்
என் கவிதைகளுக்கு
அதன் வசீகரம்
என்னை
மீண்டும்
மீண்டும்
வாசிக்க வைக்கிறது
உன்னையும்
நேசிக்க வைக்கிறது...       1157

கடலின் மீது
பரவிக் கிடக்கும்
நிலவின் ஒளியில்
மீனாய்
உன் நினைவுகள்
துள்ளித் துள்ளி
குதிக்கிறது...        1158

விளக்கேற்றிய நேரம்
வெள்ளி ஒளியாய்
வெளி வந்து
கோவிலை அடைந்து
இரு கண்களும்
கடவுளை காணுவதற்கு பதில்
கண்ணீரையே காண்கிறது... 1159

உன் குரல்
சிந்தும்
தேன் மழையில்
குடையாய்
உன் இதழ் வேண்டும்
என் உயிரே!!         1160

August 13, 2015

2015 கவிதைகள் 1141 to 1150

இரவென்ன
அவ்வளவு தூரமா?
உன் இதழ்
இருக்கும் போது!!          1141

இப்போது கூட
என் விழி
தொட்டுக் கொண்டு தான்
இருக்கிறது
உன் இதழை
இந்த இருளில் ...     1142

உன் அழகிய கண்களை
நீலமேகங்கள் நின்று
பார்க்கும் போது
நான் உன் அழகை
நீலமேகமாக வர்ணிக்கிறேன்
மிகுந்த மோகத்தோடு... 1143

உன்னைக் காணும்
நேரத்தில்
கவிதை தோன்றும்
உன் அழகின்
ஒளியின்
பிரதிபலிப்பாக... 1144

கண நேர அழுகையின்
ஆரம்பம் உன் பிரிவு
ஆறுதல் உன் நினைவு...   1145

சுகமாய் உன் கரம்
தீண்டும் கணமொன்று
வேண்டும்
அகமாய் நீ என்னுள்
ஒளி வீச வேண்டும்....     1146

அதுவரை
தண்ணீராக போன
கண்ணீர் எல்லாம்
இப்போது காதலாய்
வடிகிறது
காதலாய் வடியும்
கண்ணீரெல்லாம்
கவிதையாய் வளர்கிறது...    1147

பிரிவு என்பது
பின் ஏற்படும் நிலை அல்ல
என்று இப்போது புரிகிறது
வாழ்வின் ஆரம்பத்தில்
உன்னை பிரிந்து
வாழ்வதால்......    1148

என் முன் நிற்கும்
காலத்தில்
என் பின் இருக்கும்
உன் காதலின் நினைவுகள்
தான்
என்னை கரை
சேர வைக்கும்.....    1149

என் மெளன
சிரிப்பின் ஆரம்ப காலம்
உன் காதலின் காலம்
உண்மையில்
சிறப்பான காலம்....     1150

2015 கவிதைகள் 1131 to 1140

என் மெளனத்தின்
தாய் மொழி
உன் முத்தம்...     1131

இரவெல்லாம்
உன்னைப்  பற்றி
சிந்தித்து
இரவுக்கு பின் பிறக்கும்
முதல் பகலில்
என் இதழே
உனக்கு பரிசு....   1132

இரவையா!
நேசிக்கிறேன்!
இல்லை
இரவில்
உன் இதழை....   1133

என் கருத்த மேனியின்
அடையாளமாய்
உன்னையும்
உன் கற்பனையிலும்
உன்னையே
அனைக்கிறது இந்த இரவு...  1134

இரவு நாடும் அமைதி
அமைதியான
நம் இல்லம் நாடும்
ஓர் அழகிய இரவை...   1135

ஓர் அழகிய கவிதையின்
சாயல் நீ
கவிதையின் தலைப்பு
உன் பெயர்...         1136

பெயரற்ற
இந்த இரவின் முடிவில்
நான் இதழில் வீழ்ந்து
கிடக்க வேண்டுகிறேன்...  1137

கூர் மிகுந்த கத்தி விட
இந்த இரவு
என்னை கூர்மையாய் நோக்குகிறது
உன் கற்பனையில்
எப்படி உயிர் வாழ்கிறேன் என்று..       1138

சிலை செய்யும்
கலை எல்லாம்
எனக்கு தெரியாத ஒன்று
இருந்தும்
உன்னை அழகான
சிலையாக
வடிவமைக்கிறேன்
என் கவிதையின் வழியே..  1139

நீ என்றும் என்னுள்
வாழும் கலை
காலை முதல் மாலை வரை
உன்னைப் பற்றி
நான் எழுதும் போது.... 1140

2015 கவிதைகள் 1121 to 1130

செவி தேடும்
உன் குரலை
என் உயிரின்
செல்கள் தேடும்
உன் இதழை....         1121

பனித் துளியை
மட்டும் பருகி
உயிர் வாழும்
பறவை போல
உன் கவிதைகளை மட்டும்
பருகும் என் கண்கள்....   1122

பனியும்
தன் பணி செய்யும்
உன்னோடு
நான் ரசிக்கும்
இரவின் மழையில்....   1123

என்னுள் மிதக்கும்
கனவிலே
நீ தான் காதலி
கனவின்
கற்பனை மீறி
இப்போது மனைவி.....   1124

பனி நிறையும்
இந்த இரவில்
உன் இதழும் நிறையும்
கற்பனை ஊற்றில்....      1125

கடலாய்
என்னை மாற்றிய
படகு நீ
என்னில் நீ
நீந்தும் போது....     1126

உன்னை நேசித்து
இப்போது
காற்றை சுவாசிக்கிறேன்
உன்னோடு
ஒரு நொடியேனும்
வாழ்வதற்கு....       1127

பேரொளி வீசும்
கண்களை கண்டால்
பேரொலி எழுப்பும்
இதயம்
உன் இதழை நோக்கி...  1128

இந்த இரவை
உன் இதழால்
வெல்ல முற்படுகிறேன்...  1129

இரவு தன் சிறகை
விரித்து பறக்க முற்படுகிறது
நீ உன் விழியால்
என் இதழை பறிக்க
முற்படும் கணமொன்றில்...  1130

August 12, 2015

பேய்

பேய் ஒன்று
என்னை வழிமறித்து
சுடுகாட்டிற்கு
வழி கேட்கிறது

அழைத்துச் சென்றேன்
அவ்வழியாக தான்
நானும்
பயணிப்பதாக..

-SunMuga-
12-08-2015 00.47 AM

2015 கவிதைகள் 1111 to 1120

மாலை மயக்கத்தில்
மங்கை என்னும்
என் அரசி
என்னை ஆட்சி
புரிவது என்னவோ
மல்லி சூடா
கருங் கூந்தலில் மட்டும்...     1111

மயக்கத்தில் மல்லி சூடி
மங்கை என்னும்
என் அரசி
என்னிலே ஆட்சி
புரிவது என்னவோ
மாலை மட்டும் அல்ல
கதிர் வீசும் காலையும்.....          1112

உன் கண்களின்
சைகை கண்டு
காலையில் பறித்தேன்
வாசம் வீசிய
மல்லிக் கொடியை...    1113

இரவுப் பெருங்கடல்
பெருகியது
உன் இரவு முத்தத்தால்
இனியும் பிரியாது
என்னிலிருந்து
இந்த இரவு...       1114

உறக்கம் வருகிறது
என்றால்
உன் நினைவின்
கிறக்கத்தில்
கனவில் உன்னை
வலம் வர செல்கிறேன்
என்று அர்த்தம்...      1115

இனிய இரவில்
இனியும் என்ன தயக்கம்
மயக்கத்தின் மடியில்
என்னில் மடி சாய்ந்த கொள்ள.. 1116

உன்னை
என்னுள் நிரப்பி
இந்த
தனிமை நிறைந்த
இரவை
வழி அனுப்ப வேண்டும்
என் உயிரே!!     1117

போர்வையும் போதவில்லை
உன்னோடு
நான் காணும்
நிர்வாண கனவை
கண்களால் மூடிக் கொள்ள... 1118

புனிதத்தின் வடிவமாய்
உன்னிலே
நானும் புதைந்து
வேர்வையாக வளர்கிறேன்
இந்த இரவில்....    1119

கனவை
மனதில் சுமந்து
கண்களில் உன் முகம்
எதிர்பார்க்கிறேன்
என் அன்பே....     1120

August 11, 2015

2015 கவிதைகள் 1101 to 1110

சுகந்தத்தின் உணர்வாக
சூரியனே
உன் புன்னகை
இந்த பூவில் பதியும் போது
தேன் மட்டும் என்ன
தேன் அருவியே சுரக்கும்...  1101

சுயம் அறியாது
என்னிலே நீ படரும் நொடி
எங்கும்
உன்னை நோக்கி
எழும் என் வாழ்வின்
சிந்தனை...        1102

சுரக்கும்
உன் அன்பினால் 
பறக்கும்
என் சோகம்...     1103

சுகம் தரும்
உன் விரல் எங்கும்
என் இதழின்
ரேகை பதித்து
இந்த இரவை
புதுப்பிப்பேன்....    1104

விழி எங்கும்
உன் காதலின் உணர்வு
உயிரில் ஏனோ
உன் காதல்
பிரிவின் உணர்வு...    1105

உறக்கம் வருவதில்லை
உன்னைப் பற்றி
கவிதை எழுதும்
இரவுகளிலும்
எழுதாத
இரவுகளிலும்...             1106

விசித்திரமாய்
நீ என்ன செய்தாலும்
நம் விதிகளின் படி
உனக்கொரு முத்தம் பரிசு...  1107

சமையல் அறை
பாத்திரங்களின் சப்தங்களும்
நம் முத்தத்தின்
எதிரொளிப்பு போல...   1108

முல்லை பூக்கும்
கொடி ஒன்றில்
காதல் பூக்கும்
நீ உன் கண் கொண்டு
பறிக்கும் போது....     1109

முல்லையின் நிறம் கூட
மாறும் அழகே
உன் இதழை போல
என்னை நீ
மனதில் சுமந்து
பறிக்கும் போது...   1110

August 10, 2015

2015 கவிதைகள் 1091 to 1100

நீலக்கடலில்
மூழ்கி எழும்
வேலையில்
இக்கண்ணீருக்கு
காரணமும் வேண்டுமோ
வேண்டாம்!
எதுவாக இருந்தாலும்
இப்படியே
கரைந்து போகட்டும்...   1091

இந்த இரவின்
துக்கங்களை
மெல்ல மெல்ல
கரைத்து விட வேண்டும்
உன் நினைவில்
மீண்டும் மீண்டும்
மூழ்கி....                   1092

உன் பிரிவை விட
உன் முத்தத்தின் பிரிவையே
அதிகம் இழக்கிறது
என் இதழ்கள்
உன் கண்ணீரை....   1093

அந்தியின் சாயலில்
சிவக்கும்
உன் இதழில்
என்னை மயக்கும்
நம் உலகை வியக்கும்
ஏதோ ஒரு
ஒளியும்
சுவையும்
இன்னும் கூடிக்கொண்டே
தான் இருக்கிறது...    1094

என் வாழ்வின்
சந்தோச கணமொன்று
என்று இருந்தால்
அது
உன் கண்ணும்
என் இதழும்
சேரும் கணமாக தான்
இருக்க முடியும்....     1095

பரிபூரண
பார்வைகள்
என்னில் நீ பதியும் போது
நீ கொடுத்த
பாதி முத்தத்தின்
ஒசையை முழுமையாய்
நானும் கொடுப்பேன்
இதழின் வழியோ!
இமையின் வழியோ!!      1096

நீ இன்றி
நான் பாடும் இசையில்
இன்பத்தை விட
துன்பத்தின் ஓசைகள்
தான்
அதிகம் கலந்திருக்கும்..  1097

உன்னோடு
நான் பாடும் இசையில்
இன்பத்தை விட
இதழே அதிகம்
கலந்திருக்கும்..     1098

ராகம் கூடிய
இசையில்
ரகசியமாய்
நானும் வாசித்தேன்
உன் முத்தத்தை...   1099

இரவின் இசையில்
இன்னும்
இன்னும்
பாடிக்கொண்டே
இருக்கிறது உன் இதழ்...  1100

August 7, 2015

2015 கவிதைகள் 1081 to 1090

உன் பாதத்தில்
ஓசை கண்டு
மெல்ல துடிக்கிறது
என் இதயம்
மெல்ல சிரிக்கிறது
என் இதழ்...        1081

என் தேகத்தின்
ஆசையாய்
எப்பொழுதும்
இருப்பது
உன் இதழ்...    1082

நறுமணம் வீசும்
கனவுக்குள்
காதலராய்
எப்பொழுதும்
பூக்கும் பூ
நாம் இருவரும்....    1083

ஓய்வின்றி
ஓடும் நதியில்
ஓய்வின்றி
பறக்கும் பறவையின்
நிழல்
நீ என்னுள்
நான் உன்னுள்....      1084

பல விசித்திரமான
கனவுகளில்
நான் உறங்கி
கழிக்கும் போது
அவ் விசித்திரங்களை மீறி
விம்மி அழுகிறேன்
உன்னோடு இல்லாத
அவ்விரவை நினைத்து..  1085

செல்வதற்கு
பாதைகள் உண்டு
என்னோடு
நடப்பதற்கு
உன் பாதம் மட்டுமே
இப்பொழுது இல்லை...    1086

முடிவுகள் அற்ற
என் கவிதையின்
இறுதி வார்த்தை
காதல் என்றால்
முதல் வார்த்தை
நீ...                                 1087

பூவே
உன்னில்
என்னவளின்
முகம் பார்த்தேன்
அவளின் முகத்தில்
உன் வாசம் கண்டு
நானும் மெல்ல சிரித்தேன்.. 1088

மழைக்கு
முன் தோன்றும்
வானவில் போல
நம் மழலைகளுக்கு முன்
நாம்-அன்பின்
வர்ணங்கள்....        1089

அதித பசியில்
அதிகமாய்
உண்டு கழித்த
உன் இதழ்
ஏனோ
பசியை இன்னும்
இன்னும்
கூட்டத்தான் செய்கிறது..    1090