August 12, 2015

2015 கவிதைகள் 1111 to 1120

மாலை மயக்கத்தில்
மங்கை என்னும்
என் அரசி
என்னை ஆட்சி
புரிவது என்னவோ
மல்லி சூடா
கருங் கூந்தலில் மட்டும்...     1111

மயக்கத்தில் மல்லி சூடி
மங்கை என்னும்
என் அரசி
என்னிலே ஆட்சி
புரிவது என்னவோ
மாலை மட்டும் அல்ல
கதிர் வீசும் காலையும்.....          1112

உன் கண்களின்
சைகை கண்டு
காலையில் பறித்தேன்
வாசம் வீசிய
மல்லிக் கொடியை...    1113

இரவுப் பெருங்கடல்
பெருகியது
உன் இரவு முத்தத்தால்
இனியும் பிரியாது
என்னிலிருந்து
இந்த இரவு...       1114

உறக்கம் வருகிறது
என்றால்
உன் நினைவின்
கிறக்கத்தில்
கனவில் உன்னை
வலம் வர செல்கிறேன்
என்று அர்த்தம்...      1115

இனிய இரவில்
இனியும் என்ன தயக்கம்
மயக்கத்தின் மடியில்
என்னில் மடி சாய்ந்த கொள்ள.. 1116

உன்னை
என்னுள் நிரப்பி
இந்த
தனிமை நிறைந்த
இரவை
வழி அனுப்ப வேண்டும்
என் உயிரே!!     1117

போர்வையும் போதவில்லை
உன்னோடு
நான் காணும்
நிர்வாண கனவை
கண்களால் மூடிக் கொள்ள... 1118

புனிதத்தின் வடிவமாய்
உன்னிலே
நானும் புதைந்து
வேர்வையாக வளர்கிறேன்
இந்த இரவில்....    1119

கனவை
மனதில் சுமந்து
கண்களில் உன் முகம்
எதிர்பார்க்கிறேன்
என் அன்பே....     1120

No comments:

Post a Comment