நீலக்கடலில்
மூழ்கி எழும்
வேலையில்
இக்கண்ணீருக்கு
காரணமும் வேண்டுமோ
வேண்டாம்!
எதுவாக இருந்தாலும்
இப்படியே
கரைந்து போகட்டும்... 1091
இந்த இரவின்
துக்கங்களை
மெல்ல மெல்ல
கரைத்து விட வேண்டும்
உன் நினைவில்
மீண்டும் மீண்டும்
மூழ்கி.... 1092
உன் பிரிவை விட
உன் முத்தத்தின் பிரிவையே
அதிகம் இழக்கிறது
என் இதழ்கள்
உன் கண்ணீரை.... 1093
அந்தியின் சாயலில்
சிவக்கும்
உன் இதழில்
என்னை மயக்கும்
நம் உலகை வியக்கும்
ஏதோ ஒரு
ஒளியும்
சுவையும்
இன்னும் கூடிக்கொண்டே
தான் இருக்கிறது... 1094
என் வாழ்வின்
சந்தோச கணமொன்று
என்று இருந்தால்
அது
உன் கண்ணும்
என் இதழும்
சேரும் கணமாக தான்
இருக்க முடியும்.... 1095
பரிபூரண
பார்வைகள்
என்னில் நீ பதியும் போது
நீ கொடுத்த
பாதி முத்தத்தின்
ஒசையை முழுமையாய்
நானும் கொடுப்பேன்
இதழின் வழியோ!
இமையின் வழியோ!! 1096
நீ இன்றி
நான் பாடும் இசையில்
இன்பத்தை விட
துன்பத்தின் ஓசைகள்
தான்
அதிகம் கலந்திருக்கும்.. 1097
உன்னோடு
நான் பாடும் இசையில்
இன்பத்தை விட
இதழே அதிகம்
கலந்திருக்கும்.. 1098
ராகம் கூடிய
இசையில்
ரகசியமாய்
நானும் வாசித்தேன்
உன் முத்தத்தை... 1099
இரவின் இசையில்
இன்னும்
இன்னும்
பாடிக்கொண்டே
இருக்கிறது உன் இதழ்... 1100
No comments:
Post a Comment