கடவுளின் ஆலயத்தில்
அன்பின் சொற்களே
பரவிக் கிடக்கும்
நம் காதலின்
ஆலயத்தில்
நம் கவிதைகளே
நிரம்பி இருக்கும்... 1151
செக்கிழுத்த
செம்மலை விட
உன்னிலே
சொக்கி சொக்கி
சுற்றி வருகிறது
என் காதலின் உலகம்.. 1152
அறையொன்றில்
உன்னையே எதிர்பார்த்து
காத்திருந்தேன்
நீயோ!
கவிதையாக
என்னுள்
என்னுள்
நிறைந்து கொண்டே
இருக்கிறாய்... 1153
என்
கனவுச் சிறகுகளை
விரித்து
உன் கனவோடு
நானும் பறக்கிறேன்
அழியா
காதலின் இடம் தேடி... 1154
கனவாக
காதலாக
நீ என்னை சுற்றும் போது
நான்
உன் இதழை சுற்றுகிறேன்
பிரிவின்
துன்பத்தின்
எதிர்வினையாக
இன்பம்
எப்போது கிட்டும்
என்ற
எதிர்பார்ப்பில்... 1155
நான்
என்ற போக்கில்
நான் போக விரும்பவில்லை
நீ இருக்கிறாய்
என்ற சாக்கில்
நான்
வாழ விரும்புகிறேன்... 1156
சொல்லாய்
உன் கண்களை
தேர்ந்தெடுத்தேன்
என் கவிதைகளுக்கு
அதன் வசீகரம்
என்னை
மீண்டும்
மீண்டும்
வாசிக்க வைக்கிறது
உன்னையும்
நேசிக்க வைக்கிறது... 1157
கடலின் மீது
பரவிக் கிடக்கும்
நிலவின் ஒளியில்
மீனாய்
உன் நினைவுகள்
துள்ளித் துள்ளி
குதிக்கிறது... 1158
விளக்கேற்றிய நேரம்
வெள்ளி ஒளியாய்
வெளி வந்து
கோவிலை அடைந்து
இரு கண்களும்
கடவுளை காணுவதற்கு பதில்
கண்ணீரையே காண்கிறது... 1159
உன் குரல்
சிந்தும்
தேன் மழையில்
குடையாய்
உன் இதழ் வேண்டும்
என் உயிரே!! 1160
No comments:
Post a Comment