என் மெளனத்தின்
தாய் மொழி
உன் முத்தம்... 1131
இரவெல்லாம்
உன்னைப் பற்றி
சிந்தித்து
இரவுக்கு பின் பிறக்கும்
முதல் பகலில்
என் இதழே
உனக்கு பரிசு.... 1132
இரவையா!
நேசிக்கிறேன்!
இல்லை
இரவில்
உன் இதழை.... 1133
என் கருத்த மேனியின்
அடையாளமாய்
உன்னையும்
உன் கற்பனையிலும்
உன்னையே
அனைக்கிறது இந்த இரவு... 1134
இரவு நாடும் அமைதி
அமைதியான
நம் இல்லம் நாடும்
ஓர் அழகிய இரவை... 1135
ஓர் அழகிய கவிதையின்
சாயல் நீ
கவிதையின் தலைப்பு
உன் பெயர்... 1136
பெயரற்ற
இந்த இரவின் முடிவில்
நான் இதழில் வீழ்ந்து
கிடக்க வேண்டுகிறேன்... 1137
கூர் மிகுந்த கத்தி விட
இந்த இரவு
என்னை கூர்மையாய் நோக்குகிறது
உன் கற்பனையில்
எப்படி உயிர் வாழ்கிறேன் என்று.. 1138
சிலை செய்யும்
கலை எல்லாம்
எனக்கு தெரியாத ஒன்று
இருந்தும்
உன்னை அழகான
சிலையாக
வடிவமைக்கிறேன்
என் கவிதையின் வழியே.. 1139
நீ என்றும் என்னுள்
வாழும் கலை
காலை முதல் மாலை வரை
உன்னைப் பற்றி
நான் எழுதும் போது.... 1140
No comments:
Post a Comment