பல நிலவுகளும்
பல நிகழ்வுகளும்
கடந்த போதும்
அன்று
நான்
கண் விழித்த போது
சிமெண்ட் தரையெங்கும்
நெற்கள் உலர்ந்து
கொண்டு இருந்தது,
நெற்கள் மீது
என்
அப்பாவின்
காலடி தடங்களும்
பாதத்தின் ரேகைகளும்
இரு கோடுகளாய்
இன்னும்
இன்னும்
பல கோடுகளாய்
பரவி கிடந்தது..
எங்கிருந்தோ வந்த
பறவையின் பசியை
சிதறிய
அந்த
நெற்கள்
தீர்த்துக் கொண்டு இருந்தது..
ஈரச் சாக்கில்
இன்னும்
ஒர் நெற் குவியல்
இரவின் ஆவிகளை
பரப்பிக் கொண்டு இருந்தது..
வெயில் ஏற ஏற
வேர்வையின்
வாசத்தில் கூட
அந்த
நெல்லில் வாசனைகள்
கலந்து வீசிக்
கொண்டு இருந்தது...
பாரங்கள் ஏதும் அற்று
தள்ளு வண்டி
சாலையில்
வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருந்தது..
இரு மாடி கட்டிடம்
வந்த பிறகு
நெல்லிற்கு பதில்
வெறும்
கட்டிடத்தின் நிழல்
மட்டுமே உலர்ந்து
கொண்டு இருக்கிறது....
-SunMuga-
23-08-2015 18.18 PM
No comments:
Post a Comment