August 13, 2015

2015 கவிதைகள் 1121 to 1130

செவி தேடும்
உன் குரலை
என் உயிரின்
செல்கள் தேடும்
உன் இதழை....         1121

பனித் துளியை
மட்டும் பருகி
உயிர் வாழும்
பறவை போல
உன் கவிதைகளை மட்டும்
பருகும் என் கண்கள்....   1122

பனியும்
தன் பணி செய்யும்
உன்னோடு
நான் ரசிக்கும்
இரவின் மழையில்....   1123

என்னுள் மிதக்கும்
கனவிலே
நீ தான் காதலி
கனவின்
கற்பனை மீறி
இப்போது மனைவி.....   1124

பனி நிறையும்
இந்த இரவில்
உன் இதழும் நிறையும்
கற்பனை ஊற்றில்....      1125

கடலாய்
என்னை மாற்றிய
படகு நீ
என்னில் நீ
நீந்தும் போது....     1126

உன்னை நேசித்து
இப்போது
காற்றை சுவாசிக்கிறேன்
உன்னோடு
ஒரு நொடியேனும்
வாழ்வதற்கு....       1127

பேரொளி வீசும்
கண்களை கண்டால்
பேரொலி எழுப்பும்
இதயம்
உன் இதழை நோக்கி...  1128

இந்த இரவை
உன் இதழால்
வெல்ல முற்படுகிறேன்...  1129

இரவு தன் சிறகை
விரித்து பறக்க முற்படுகிறது
நீ உன் விழியால்
என் இதழை பறிக்க
முற்படும் கணமொன்றில்...  1130

No comments:

Post a Comment