August 13, 2015

2015 கவிதைகள் 1141 to 1150

இரவென்ன
அவ்வளவு தூரமா?
உன் இதழ்
இருக்கும் போது!!          1141

இப்போது கூட
என் விழி
தொட்டுக் கொண்டு தான்
இருக்கிறது
உன் இதழை
இந்த இருளில் ...     1142

உன் அழகிய கண்களை
நீலமேகங்கள் நின்று
பார்க்கும் போது
நான் உன் அழகை
நீலமேகமாக வர்ணிக்கிறேன்
மிகுந்த மோகத்தோடு... 1143

உன்னைக் காணும்
நேரத்தில்
கவிதை தோன்றும்
உன் அழகின்
ஒளியின்
பிரதிபலிப்பாக... 1144

கண நேர அழுகையின்
ஆரம்பம் உன் பிரிவு
ஆறுதல் உன் நினைவு...   1145

சுகமாய் உன் கரம்
தீண்டும் கணமொன்று
வேண்டும்
அகமாய் நீ என்னுள்
ஒளி வீச வேண்டும்....     1146

அதுவரை
தண்ணீராக போன
கண்ணீர் எல்லாம்
இப்போது காதலாய்
வடிகிறது
காதலாய் வடியும்
கண்ணீரெல்லாம்
கவிதையாய் வளர்கிறது...    1147

பிரிவு என்பது
பின் ஏற்படும் நிலை அல்ல
என்று இப்போது புரிகிறது
வாழ்வின் ஆரம்பத்தில்
உன்னை பிரிந்து
வாழ்வதால்......    1148

என் முன் நிற்கும்
காலத்தில்
என் பின் இருக்கும்
உன் காதலின் நினைவுகள்
தான்
என்னை கரை
சேர வைக்கும்.....    1149

என் மெளன
சிரிப்பின் ஆரம்ப காலம்
உன் காதலின் காலம்
உண்மையில்
சிறப்பான காலம்....     1150

No comments:

Post a Comment