August 23, 2015

2015 கவிதைகள் 1171 to 1180

பெருங்கடலின்
ஆற்றல்
கடல் அலைகளில்
தெரிகிறது

பெருங்காற்றின்
ஆற்றல்
புயலில் தெரிகிறது

பெண்ணே!
உன் காதலின்
ஆற்றல்
உன் பிரிவில் தான்
எனக்கு புரிகிறது...       1171

நீ
பேசித் தின்ற
காலத்தை எல்லாம்
இப்பொழுது
என் காதலின்
பசிக்காக
தேடிக் கொண்டு இருக்கிறேன்.. 1172

இரவின்
இசையே இன்பம்
அதிலும்
தேநீரும்
தேன் தரும்
உன் இதழின் இசையும்
இந்த
காதலுக்கு இன்னும் இன்பம்... 1173

நிற்பது என்றால்
உன்னோடு
நிற்க வேண்டும்
நடப்பது என்றால்
உன்னோடு
நடக்க வேண்டும்
பறப்பது என்றால்
உன்னோடு
பறக்க வேண்டும்
என் உயிரே!!         1174

ஆடிக் காற்றில்
அலைமோதும்
என் எண்ணங்களில்
எப்பொழுதும்
அமைதியாய்
என்னை
உருக்குகிறது
உன் இதழ்.....    1175

நெருப்பிட்ட
காட்டிற்குள்
காற்றில் படரும்
ஒரு தீயை போல்
உன் காதல்
கவிதைகள்
என்னுள்
பரவி எரிகிறது...  1176

மனம்
முழுதும்
உன் காதலின் சுமை(பளு)
கண்ணீராய்
கரைவதிலும்
ஓர் சுகம் இருக்கத்தான்
செய்கிறது...   1177

நான் வெளி செல்லும்
எந்த இடத்திலும்
உன் வீட்டின்
இருப்பிடத்தை
கடந்து
எப்படியேனும்
என்னுள் கலந்து விட
தான் செய்கிறாய்...    1178

மீன்களை காட்டி
ஏமாற்றிக் கொண்டு
இருக்கிறாய்
நம் குழந்தைக்கு
நான்
உன் கண்களைப்
பார்த்து
என்னையே
மாற்றிக் கொண்டு இருக்கிறேன்...     1179

என் ஜனனத்தின்
அர்த்தம் அறிய
உன்னையே
மனனம் செய்கிறேன்
என் அழகே!!      1180

No comments:

Post a Comment