August 11, 2015

2015 கவிதைகள் 1101 to 1110

சுகந்தத்தின் உணர்வாக
சூரியனே
உன் புன்னகை
இந்த பூவில் பதியும் போது
தேன் மட்டும் என்ன
தேன் அருவியே சுரக்கும்...  1101

சுயம் அறியாது
என்னிலே நீ படரும் நொடி
எங்கும்
உன்னை நோக்கி
எழும் என் வாழ்வின்
சிந்தனை...        1102

சுரக்கும்
உன் அன்பினால் 
பறக்கும்
என் சோகம்...     1103

சுகம் தரும்
உன் விரல் எங்கும்
என் இதழின்
ரேகை பதித்து
இந்த இரவை
புதுப்பிப்பேன்....    1104

விழி எங்கும்
உன் காதலின் உணர்வு
உயிரில் ஏனோ
உன் காதல்
பிரிவின் உணர்வு...    1105

உறக்கம் வருவதில்லை
உன்னைப் பற்றி
கவிதை எழுதும்
இரவுகளிலும்
எழுதாத
இரவுகளிலும்...             1106

விசித்திரமாய்
நீ என்ன செய்தாலும்
நம் விதிகளின் படி
உனக்கொரு முத்தம் பரிசு...  1107

சமையல் அறை
பாத்திரங்களின் சப்தங்களும்
நம் முத்தத்தின்
எதிரொளிப்பு போல...   1108

முல்லை பூக்கும்
கொடி ஒன்றில்
காதல் பூக்கும்
நீ உன் கண் கொண்டு
பறிக்கும் போது....     1109

முல்லையின் நிறம் கூட
மாறும் அழகே
உன் இதழை போல
என்னை நீ
மனதில் சுமந்து
பறிக்கும் போது...   1110

No comments:

Post a Comment