அன்புள்ள அம்முவிற்கு,
என்னை விட என் எழுத்துகளை அதிகம் ரசித்தவளும்,வாசித்தவளும் நீயாக மட்டுமே இருக்க முடியும். இருள் சூழ்ந்த வானத்தில் எவ்வாறு நிலா அழகாக தெரிகிறதோ அவ்வாறே உன்னைப் பற்றியும் உன் காதலை பற்றியும் எழுதும்போது என் எழுத்துகளும் அழகாக தெரிகிறது.
ஏனோ என்னுள் தனிமை வாட்டும் போது என்னை மீறி என்னால் எழுதப்படும் வார்த்தைகள் உன்னை ஒரு சில நேரம் வாட்டும் என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும் அதையும் நீ வாசித்து விட்டு சிறு புன்னகையிலே உன் கருத்துகள் மொத்ததையும் உதிர்த்து விடுவது தான் என் எழுத்தின் பலம்.
இந்த வருடம் முடியும் தருணம் இது. என்னால் முடிந்த வரை நம் காதலை பற்றி எழுதி இருக்கிறேன். ஆனாலும் இது குறைவு என்று எனக்கும் தெரியும் என்னை மன்னித்து விடு.
உந்தன் காதலை நினைக்கும்போது என்னுள் சந்தோசம் ஒரு பெரும் கடலாக இருக்கிறது, ஆனால் அவளோடு ஆன என் காதலை நினைக்கும் போது ஏனோ கண்ணீர் என் வாழ்க்கையை அடி கோடிட்டு காட்டுகிறது.
வாழ தகுதியற்று நிற்கும் தருணத்தில் என் மீதான உன் காதல் தான் என்னை வாழச் சொல்கிறது.
நான் எழுதும் கவிதை
முத்தங்களாக நீ
சொன்ன வார்த்தைகள்,
என் கவிதையின்
வார்த்தைகள் முத்தங்களிடையே
நீ செய்யும் சின்ன சின்ன
குறும்புகள்,
என் வார்த்தையின் அர்த்தங்கள்
பகலை இரவாக மாற்றும்
ஓர் அற்புத போர்வை,
போர்வைக்குள் கவிதையாக
உன் முத்தங்கள்...
-SunMuga-
31-12-2014