December 15, 2014

தம்பியின் காதல்

ஒரு நிமிடம் தாயாக மாறி,
தடுமாறி யாருக்கு
யார் அறிவுறை கூறுவது?
என்று யோசித்து -
நடப்பவை நடக்கும் என்ற
முதிர்ச்சியோடு முதல்
முதலில் தம்பியின் கண்களை
பார்க்க தவிர்த்தேன்..
அனைத்தும் அடங்கிய இரவு
சட்டென்று பெரியவன் ஆன
உணர்வு எழுந்ததும்-
எழுந்தும் எழ மறுக்கும்
கண்ணீர் - காரணம்
தம்பியின் காதல்..
காதல் ஊற்று நீர்,
கொப்பளிப்பதோ உணர்ச்சிகள்,
உணர்ச்சிகள் பெருக பெருக
ஊற்று நீரும் பெருகுவதை
போல, வாழ்வும், வாழ்வதற்கான வளமும் பெருக நித்தம்
உழைக்க வேண்டும்..
உழைப்பு உன்னிடம் அதிகம்
இருக்கிறது..
என்னுள் இருக்கும்
காதலை பற்றி எனக்கே
தெரியாத போது உனக்கு
காதலை பற்றி கூற எனக்கு
எந்தவொரு அடிப்படை
தகுதியும் இல்லை என்றே
நினைத்தேன் அவ்விரவில்..
ஆதி முதல் அனைத்தையும்
அம்மாவிடம் நீ சொல்லி
விட்ட பிறகு தான் பெரு மூச்சு
நான் விட்டேன்..
-SunMuga-
15-12-2014 01.30 AM

No comments:

Post a Comment