என் சிரிப்பினில் பிறக்கிறது
உன் காதலும், காமமும்.
--------------------------------------------------------------------
காமம் கீச்சப்பட்ட இரவின் பின்
அதிகாலை பிறக்கிறது
சிறு குழந்தையாக.
--------------------------------------------------------------------
கோடிட்ட இடங்களை
நிரப்புவது போல தான்
உன் கண்கள் காட்டிய
இடங்களை நிரப்புகிறேன்
என் இதழால்...
--------------------------------------------------------------------
உன் இமை அசைத்தால்
உன் இதழுக்கு தான்
முதல் பரிசு...
--------------------------------------------------------------------
பக்கத்து அறை மெதுவாக
திறந்தாலும் மிக
நுணுக்கமாக கேட்கிறது
கடன் வாங்கிய பிறகு..
--------------------------------------------------------------------
பாய்ந்து வந்த பாம்பு
கண்ணுக்குள் கொத்திய
பிறகு கலைந்தது அந்த கனவு.
--------------------------------------------------------------------
குடிசையும் வானமாகியது
குண்டு பல்பில்
நட்சத்திரம் மிளிரும் போது..
--------------------------------------------------------------------
-SunMuga-
14-12-2014 22.00 PM
No comments:
Post a Comment