இருள் சூழ்ந்த அறையுல்
கற்சிலையின் கைகளாக
பாம்புகளின் வால்கள்..
******
பெரும் மழையாக,
பெரும் ஆறாக,
பெரும் கடலாக,
பெரும் அருவியாக,
அனைத்து கனவிலும்
நீர் சுரக்கிறது...
******
திருவிழா இரவு
ஆட்களுக்கு தெரியாமல்
என் பார்வையை
தொடர்ந்தவளின் உருவம்
அறியவில்லை,
புற்றின் வெளியே
தன் தலையை நீட்டி
தன் வாய்களை திறந்து
தன் பசியை போக்கி கொள்கிறது
என்னோடு இருந்தவள்
ஊற்றிய பாலின் வழியே...
******
நீண்ட நிலப்பரப்பு
நீண்ட ஓர் அலக்கலிப்பு
நானும் என் அக்காவும்
அலைகிறோம் யாரும்
துரத்தாத போதும்...
******
சொந்த ஊரின் கோவில் அது
திருவிழா இரவு,
தெருக்கள் தோறும்
மின்னி மின்னும் மின்சார
விளக்குகள்,
யாருமற்ற சாலையை அடையும்போது
அழுத்தமாக,
மிக சத்தமாக அழும்
பெண்ணின் குரல்,
ஒரு பெண் அல்ல
ஓராயிரம் பெண்ணின்
குரல்கள்..
******
நிஜத்தில் கூட
என் அப்பாவின் கைகளை
பற்றிக் கொண்டு நடப்பதில்லை,
முதல் முறை நடந்தேன்
மிக நீளமான பள்ளி சுவரை
பார்த்த படி
யாரோ ஒருவரைப் பற்றி
இருவரும்
பேசிக்கொண்டு நேற்றிரவு..
******
குடிசை வீடு
விளக்கும் இல்லை,
அத்தைக்கு அறிவுறை
கூறுகிறாள் அம்மா...
******
தென்னம் தோப்பு கிணற்றில்
தலை இல்லாத பெண்
எப்படி உள்ளே வந்தது
என்று தெரியாத படி
ஆம்புலன்ஸ்,
அலறிய படி ஓடி வந்த
விதவை கிளவியின்
கால்களை தடுக்கிறது
வயல் வரப்புகள்,
அவள் கையை பற்றி
அவளை தூக்கும் போது
நான் பார்த்தேன்
அவள் கைகள் முழுதும்
ரத்தம்...
******
வறண்ட நிலத்தில்
திடீரென
வானத்தில் இருந்து மட்டும்
அல்ல இன்னும் எத்தனையோ
வழிகளில் வழிகிறது
தண்ணீர்,
கண்ணாடி அறையில்
பைத்தியமாய் அலையும்
வேசிப் பெண் குடுவையை
எடுத்து தானே தன் வயிறை
கிழித்துக் கொள்கிறாள்,
வெளியே நான் நிற்கும்
இடத்தை தவிர அனைத்து
இடமும் தண்ணீரால்
நிரம்பி இருக்கிறது,
பெண்களை பிடிக்காத கயவன்
போல ஒருவன் தண்ணீரில்
ஓடும் படகில் ஒரு
பெண்ணின் பிறப்புறுப்பில்
தன் கையை விட்டு
கொன்று வீசுகிறான்,
எங்கோ இழுத்து செல்லும்
படகு காட்டின் செடி கொடிகள்
மீது சீறி பாய்ந்து மலையில்
படியில் இறங்கும் போது தான்
நான் பார்த்தேன் கோவிந்தன்
சாமியின் உருவமாக நாங்கள்
என்னும் விளக்கு தூணை..
******
இருள் சூழ்ந்த குகை,
பாறையின் மீது வடியும்
தண்ணீர்,
தண்ணீரின் மீது மிதக்கும்
பாம்புகள்,
அரை நிர்வாணமாய்
பாறையின் மீது அமர்ந்து
இருக்கும் என் அண்ணன்..
******
No comments:
Post a Comment