December 16, 2014

இரவு பேய்

இருள் சூழும் போது
நீ வந்து விடுகிறாய்,
நீ வந்தால் தான்
எனக்கு எப்போதும்
இரவு வருகிறது..
இருட்டில் உன்னில்
முதல் எது முடிவு எது
என்று என்னால் யூகிக்க முடியவில்லை..
தூக்கம் இல்லாமல்
முழித்து இருக்கும் எனக்கு
எப்போதும் துக்கதோடு
வரும் நீ தான் ஆறுதல்..
துக்கம் நிறைந்த உன்
கண்களை இரவாக
நானும் பார்க்கிறேன்,
நான் பார்க்கும் இடமெல்லாம்
உன் துக்கமாகவே தெரிவது
தான் எனக்கு துயரம்..
நான் உன்னோடு பேசினால்
அது பகல்,
நீ என்னோடு பேசினால்
அது இரவு,
என்று நானே
பிரித்துக் கொண்டேன்..
இரவை உடையாக உடுத்தி
வரும் உன்னை
ஒரு முறை கூட உரசி
பார்த்தது இல்லை - ஏன்?
கண்களை திறந்து பார்த்தால்
இவ்வுலகம் ஓர் இருட்டு,
கண்களை மூடி பார்த்தால்
இருட்டுனுல் நீ ஓர் உலகம்..
நிலவை பார்த்து நீ சிரித்தாய்!
ஏன் என்று நான் கேட்டேன்
இதோ உன் விளக்கம்;
இருள் படர்ந்த என் உலகில்
எட்டி பார்த்தது அந்த நிலா;
ஆனால் நீயோ!
இருள் படர்ந்த என் இரவில்
எட்டி குதித்த ஓர் நிலா...
இரவே உன் துக்கத்தில்
பிறந்த ஒரு துளி தான்
இந்த கடல் என்றாலும்
அவை உன்னைப்போல இல்லை,
தன் துக்கங்களை
அடக்க முடியாமல் அலையாய்
அலைந்து கொண்டு இருக்கிறது,
அதன் சலசலப்பு இன்னும்
எழும்பிக் கொண்டே இருக்கிறது..
-SunMuga-
19-12-2014 12.00 AM

No comments:

Post a Comment