December 10, 2014

அலுவலகம்

ஆதி முதலே எனக்கும் என் மீது திணிக்கப்பட்டு இருக்கும் இவ்வேலைக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றே தோன்றுகிறது. யாருக்கு புரியும் நல்ல கவிதையை படிக்க ஏங்கும் என் கண்களின் வலியும், நல்ல கவிதையை எழுத துடிக்கும் என் கை விரலின் வலியும். என்னை சுற்றும் உலகத்தை நான் நிதானமாக தான் கவனிக்கிறேன் என்று எனக்கே தெரிகிறது. உறக்கமற்ற இரவில் உடையும் காதல் எனக்கு பல நேரங்களில் என்னைப் பற்றி பல விதமான  அறிக்கைகள் தெரிவிக்க தான் செய்கிறது. என்ன செய்வது என்று யோசிப்பது தான் மிகத் துயரமாக இருக்கிறது.
அப்போதும் சம்பளத்திற்காக தான் வேலை செய்தேன். இப்போதும் சம்பளத்திற்காக தான் வேலை செய்கிறேன். இதற்கு மத்தியில் குறைவான சம்பளம் பெறும் உன்னை நான் எப்படி காதலிக்க முடியும் என்று என்னை ஒதுக்கியவளையும் நினைக்கத் தான் செய்கிறேன்.
அவள் என்னை ஒதுக்கியதில் எந்தவொரு தவறும் இல்லை. இது என்னைப் பற்றி நான் எழுதிய வரி;
நித்தம் நிதானமுற்றே
அலைகிறேன் நிறையாத
வயிற்றை சுமந்துகொண்டு..
எழுதி இருப்பது என்னவோ ஒரு வரி தான். ஆனால் அதில் பிரதிபலிப்பது என் இயல்பான வாழ்க்கை. இந்த வாழ்க்கை ஒரு வேலை அவளுக்கு புரிந்து இருக்கலாம் அதனால் என்னவோ சேரும் முன்னே பிரிந்து விட்டாள்.
என் வாழ்க்கையின் விதியை எதிர் நோக்கி வீதி எங்கும் அலைகிறேன் விடுமுறை நாட்களில் கூட, வாழ்வதற்கு நான் ஆற்றும் கடமைகளை மறந்து.
-SunMuga-
10-12-2014 03.48

No comments:

Post a Comment