December 29, 2014

Phoenix

கண்ணாடி கடைகளை  
பார்த்த படி நடந்தாலும் 
என்னுள் உன் காதலே 
கடக்கிறது ஒவ்வொரு 
அடியிலும்...
******

கார்கள் ஓய்வு எடுக்க 
தனி அறைகள் இருக்கிறது
அன்பே! நம் காதல்
ஓயாமல் வேலை செய்ய ஒரு
அறையும் இல்லை என்பதே 
என் வருத்தம்...
******

கலைநயம் மிகுந்த பொருட்கள் 
ஏராளம் வண்ண வண்ண 
மின் விளக்குகளுடன்,
அன்பே! நான் ரசித்தது 
என்னவோ உன் கண்களை 
மட்டும் தான்...
******

படிகளை கூட பார்க்காமல் 
தடுமாறுவதை போல
என் கை விரல் தீண்டி
என் கண்களை பார்க்கிறாய்,
ஏறும்போதும் இறங்கும்போதும் escalator-ல்
******

அவ்வப்போது திரையில் 
குவியும் இருளுக்காகவே 
நானும் நீயும் போய் இருக்கலாம் 
பிசாசு படத்திற்கு..
******
நகைக் கடையில்
தேடிய நகை இல்லை என்று 
கோபமாய் நீ வெளியே 
வந்த பிறகு தான் நீ
சொன்னாய் - மகனுக்கு
"குஞ்சுமனி"தேடுவதாய்...
******

சொட்டு சொட்டாக மழை நீர்
சொட்டிய கண்ணாடியை 
பார்த்த போது புன்னகை 
பூத்தது உன் முகத்தில் 
எனக்கு மட்டும் தானே தெரியும்
அது உன் வேர்வையை 
ஞாபக படுத்துவதாய்..
******

நீண்ட நேரம் உன்
இதழ்களை சுவைப்பது 
போல தான்
பெரிய சைஸ் கப்-பில் 
உன்னோடு 
காபி பருகுவதும்..

No comments:

Post a Comment