December 23, 2014

புத்தாண்டு

இந்த ஆண்டின்
இறுதி கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...

அடுத்த ஆண்டின்
முதல் கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...

உனக்கும் எனக்குமான
வாழ்க்கையில் எனக்கு
மிஞ்சி இருக்கும்
ஒர் கடமை உன்னிடம்
மன்னிப்பு கேட்பது...

மானமற்ற என் வாழ்க்கையில்
இன்னும் என் உயிர் இருக்கிறது உன்னிடம் மன்னிப்பு கேட்க...

உயிரே! என்று உன்னை
அழைத்தற்காக மன்னிப்பு கேட்கிறேன்..

என் உலகம்! நீ என்று
நினைத்தற்காக மன்னிப்பு
கேட்கிறேன்..

உன்னுடனான என் கனவிற்கு
மன்னிப்பு கேட்கிறேன்..

கனவிலும் உனக்காக
நான் வடித்த கண்ணீருக்காக
மன்னிப்பு கேட்கிறேன்..

நிலவாக உன்னை நினைத்து
அதில் இரவாக என்னை
இணைத்து நான் வடித்த
கவிதைக்காக மன்னிப்பு
கேட்கிறேன்..

கவிதையில் வாழும்
என் காதலுக்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..

காதலுள் வாழும்
என் பிரியத்திற்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..

பிரியத்தில் வாழும்
என் சுகத்திற்காக நான்
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்..

சுகமாக நான் நினைக்கும்
என் மரணத்தின் முன்
உன்னிடம்
நான் கேட்க நினைக்கிறேன்
ஓர் அர்த்தமற்ற மன்னிப்பு..

-SunMuga-
24-12-2014 00.08 AM

No comments:

Post a Comment