மகிழ்ச்சி பரவும்
இவ்விரவில்
தெரியும் இருளில்
எங்கெங்கும் பரப்புவோம்
நம் காதலின்
இனிமையை
இதழோடு இதழ் கோர்த்து
மின்னி மின்னி
தெரியும் நட்சத்திரங்களுடன்
ஆயிரம் ஆயிரமாய்
கனவுகளை கடந்து... 171
மயங்கி நிற்கும்
அவ்விரவில்
வாசலில்
தயங்கி தயங்கி
நீ தந்த முத்தம்
பொங்கி வருகிறது
நித்தம் இவ்விரவில்... 172
தனிமை படுத்தப்பட்ட
வார்த்தைகளை போல
அர்த்தங்கள் இல்லாத
இவ்வாழ்க்கை
வாழ்வதற்கு ஓர்
காரணம் உன் காதல்... 173
கரும் புள்ளிகள் நிரம்பிய
இவ்விரவில்
கரும் புள்ளியாய் உனக்கு
அழகூட்டும் உன் மச்சத்தை
தேடி அலைகிறேன்
கருஞ் சிறுத்தையாய் நான்.. 174
நீ எங்கே
பார்க்கிறாய்
என் முகம் தூக்கி
பார்க்க முடியவில்லை
என்னை மூட
என் கைவிரல்
போதுமா?
கொஞ்சம் உன்
கைவிரலோடு
உன்னால் முடிந்ததை
தந்து உதவிட
வருவாயா?
இவ்விரவோடு
நான் என்னையும்
மூடிக்கொள்ள... 175
யாத்திரையை தொடர்கிறேன்
நித்திரையில்
உன் கை விரல் பிடித்து.. 176
நீ என்றால் நான்
நான் என்றால் நீ
நீயும் நானும்
என்றால் காதல்
காதல் என்றால்
முதலில் அன்பு
இரண்டாவது அரவணைப்பு
மூன்றாவது முத்தம்
நான்காவது இதயத்தின்
சத்தம்
இப்படி ஏதோவொரு
நம்பிக்கையில்
நானும் நீயும்
வாழ்வது தான் காதல்.. 177
கனவு கண்டவுடன்
கண் விழிக்கிறேன்
உடைகள் அற்ற
இரவைப் போல
ஏனோ இவ்விரவை
கடக்கிறேன்.. 178
நிகழ்ந்த நிகழ்வு
நிஜமாய் என்று
யோசித்தேன்
கனவில் அது நடப்பதற்கு
சாத்தியம் இல்லாத போதும்.. 179
புதிய புதிய
அவதாரம் எடுக்கிறது
உன் இரவு முத்தம்... 180