January 22, 2015

2015 கவிதைகள் 101 to 110

வீடுகள் அற்ற நிலங்களை
போல நிர்வாணமாய்
என் கனவுகள்
நீ இல்லாத ஒரே
ஒரு காரணம் தான்
என் உயிரே!!                            101

சோகத்தில்
தனித்து வாழ்கிறோம்
நம் காதலின்
ஞாபகங்கள் அவைகளை
தனித்தாலும்...                       102

வெற்றிடம் நிரப்பிய
உன் நினைகள் ஏனோ
நிஜங்களை நினைக்க
கூட மறுக்கிறது...              103

நிஜமாக நான்
உன்னோடு மட்டும்தான்
வாழ்கிறேன் - ஆதாரம்
நான் உயிரோடு இருப்பது
மட்டும்தான்...                    104

பேசுவதற்கு கூட தயக்கம்
உன் முத்தத்தின் மயக்கம்
தீராத இரவுகளில்...         105

பனைமரம் நான் என்று
உரைத்தேன்
துணை மரம் நீ என்று
உரைத்தாய்
உன் உதட்டின் வழியே..    106

சொட்டிய மழையில்
கருங் கூந்தல் நுனியில்
சொட்டி வடியும்
நீர் துளியில்
வளர்கிறது என்
முத்தத்தின் ஆயுள்...      107

நீ இல்லாத இரவின் 
பயணத்தில் என்னோடு 
எப்போதும் பயணிப்பது 
உன் அழகான நினைவுகளும் 
எப்போதும் நீளும் 
நம்மைப் பற்றிய கனவுகளும்..   108

இருட்டை சுவாசிக்க 
பழகிவிட்டேன் - கொடிய 
இருட்டில் என் முகத்தை
வருடி நீ கொடுத்த
முத்தத்தின் பின்..                  109

பூக்கள் உதிர்ந்த 
ஆளில்லா இந்த வழியில் 
ஒற்றை ஆளாய் 
நானும் பயனிக்கிறேன் 
உன் நினைவை கையில் ஏந்தி
பனி இரவை கடந்து 
பாதையும் மறந்து...           110

No comments:

Post a Comment