அமிர்தத்தின் துளியாய்
உன் கனவுகள்
எப்போதும் எனக்கு
துணையாய் இருக்கிறது
துயரங்களை கடந்து... 81
பரிமாறிக் கொண்ட
புத்தகங்கள் போல
நீ படித்ததை
நான் படிப்பதும்
நான் படித்ததை
நீ படிப்பதுமாய்
காதல் பக்கங்களை
இருவரும் கடக்கிறோம்.. 82
மஞ்சள் மேகத்தின் ஊடே
ஒரு சிறு பறவை
பறப்பதை போல
உன் ஞாபகத்தின் ஊடே
நானும் பறக்கிறேன்
சிறு பறவையாய்... 83
"கருவாயா" என்று
என்னை அழைக்கும்
போதெல்லாம் "கொஞ்சம்
கொஞ்ச வாயேன்"
என்று சேர்த்து அழைத்து
விடுகிறாய்... 84
கடவுள் தந்த வரமும்
உன்
காதல் தந்த வரவும்
என் கவிதைகள்.. 85
வசந்தம் வீசியும்
வாடி நின்றேன்
பெருங்கடல் ஓரத்தில்
உன்னைப் பற்றி
ஒரு கவிதையும் அமையாத போது
அலை அலையாய் உன்
ஞாபக அலைகளை
அள்ளி அள்ளி நீ
வீசி எறிந்த போது
என்னுள் பிறக்கும்
கண்ணீரும் ஓர்
கவிதை என்று
என் கால்களை வருடி
சொல்லியது ஒர்
சிறு நண்டு... 86
பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும்
காற்று நான்
உன் கண் இமைக்காவும்
உன் இதழ் அசைவுக்காவும்
அசையமல் காத்திருக்கிறேன். 87
அவளால் கசக்கி எறியப்பட்ட
காகிதம் நான்
என்னையும் எடுத்து
கவிதையாக உன்
இதழையும் பதித்து
எப்போதும் என்னை
பாதுகாக்கும் தேவதை நீ.. 88
நோய்கள் தடுக்கும்
தடுப்பூசி ஏனோ
தடுக்க முடியவில்லை
நம் அம்முவின் கண்ணீரை.. 89
அதிகமான உன் அன்பால்
எனக்கும் பிறந்தது தெம்பு
இருந்தாலும் நானும்
நடப்பதற்கு தேவைப்படுகிறது
உன் ஞாபகமாய் ஓர் கம்பு.... 90
No comments:
Post a Comment