உன் கண்களை போல
உன் காதணியும் இடமும்
வலமுமாய் பார்க்கிறது
முத்தமிடும் போது... 91
உன் கடைசி வளையலும்
காத்திருக்கிறது
உடைவதற்கு அல்ல
களைவதற்கு... 92
நித்தம் நீ வாசிப்பதற்காகவும்
அதனுள் நம் காதல்
வசிப்பதற்காகவும் நானும்
எழுதுகிறேன் உன்னைப்
பற்றிய கவிதையை.. 93
உனக்காக ஒரு கவிதை
எழுத ஆரம்பித்தேன்
இப்போதோ ஒவ்வொரு
கவிதையும் உனக்காகவே
எழுதுகிறேன்... 94
கவியும் உன் கரம்
தொட்டவுடன் மீறும்
காதலும் கவிழ்ந்த
இரவுக்கே உள்ள
ஒரு தனி அழகு... 95
தவறாய் நான்
செய்தேன் திருத்தியது
என்னவோ உன் இதழ் தான் 96
நீயும் நானும் இருப்பதுக்
கென்று இருக்கிறது
ஓர் இல்லம் இதயம்
திறப்பதற்குக் கென்று
இருக்கிறது காதல்... 97
கருமை சூழ்ந்த வான்
மேகங்களை பார்க்கும் போது
கருமை நிறைந்த உன்
கண்ணின் இமை முடிகளே
என்னை முத்தமிடுகிறது.. 98
வெட்டிக் கதையை
நீ பேசும் போது அது
குட்டிக் கவிதையாகவே
எனக்கு கேட்கிறது... 99
நூறாவது கவிதையாக
ஒரேயொரு முத்தம்
தருவாயா? 100
No comments:
Post a Comment