குருதி சிந்த நீ அறுத்தாய்
உன் கையை
நான் அறுக்க நினைப்பதோ
ஆணாக
மற்றவர் என்னும்
என் ஆணுறுப்பை
மட்டும் தான்... 131
ஏதோவொரு பெருமை
இருக்கத் தான் செய்கிறது
இந்த இரவுக்கும்
நீ இல்லாத போதும்
இரவலாக
அவை கொடுக்கும்
உன் முத்தத்தால்.. 132
ஒரு முறை தேவனையும்
வணங்கினேன்
தேவதையே! நீ
வேண்டுமென.. 133
மறையும் வெளிச்சத்தில்
பிறக்கும் இருளில்
தவழ ஆரம்பித்து விடுகிறது
உன் முத்தம்... 134
இரவில் நான் விளையாட
உதவும் விளையாட்டு சாமான்
உன் வளையல் மட்டும் தான்.. 135
வண்ண வண்ண
வளையல்கள் நீ
இட்டாலும்
என் எண்ணத்தை முழுவதுமாய்
கவர்வது உன் இதழ்
மட்டும்தான்... 136
ஜோடி ஜோடியாக
வளையல்கள் இட்டு
கொள்கிறாய் ஜாடயாய்
என்னை பார்த்து..... 137
சீக்கிரமாய் வந்து விடு என
உன் வளையலை குலுக்கி
சைகை செய்கிறாய்
புன்னகையோடு..... 138
பறித்த பூவை
கொஞ்சம்
வளையலுக்கும் இட்டு
அழகு பார்ப்பது
என் அழகு மட்டும் தான்... 139
அலைப்பேசியின் அலறலாக
உன் வளையல் ஒலியை
பதிவு செய்த பின்
நான் உறங்குவதே இல்லை.. 140
No comments:
Post a Comment