January 31, 2015

2015 கவிதைகள் 161 to 170

வண்ணம் மின்னும்
வார்த்தையை வடிக்க
நானும் யோசிக்கிறேன்
யோசனைகளை கடந்து
உன் காதலும்
என் காமமும்
கலந்து காற்றில்
படரும் வண்ணமாக
உன் முகமே
மின்னுகிறது
என் கவிதையில்..               161

உன் காதலையிட்டு
கவிதையை பிடிக்கிறேன்
தூண்டிலிட்டு மீனை
பிடிப்பதை போல..              162

ஏதோ ஒன்றை
சொல்ல
மெளனமாய் பேசிக்
கொண்டு இருக்கிறேன்
தனிமையில்
உன்னோடு
உன் காதலோடு
காகிதத்தின் வழியே
கவிதையாய்...                     163

ஒற்றை வரியாய்
இரவில் உன்
இதழை பற்றி
இரவின் தனிமையை பற்றி
நிலவின் முழுமையை பற்றி
ஏதோ ஒன்றை
எழுதிக் கொண்டு தான்
இருக்கிறேன் இந்த இரவில்.. 164

நான் இருப்பதற்கென்று
இருக்கிறது
உன் இதயம்
நான் பெறுவதற்கென்று
பிறக்கிறது
உன் முத்தம்
நான்
இருப்பதும்
பெறுவதுமாய்
வாழ்வதற்கு என்றும்
இருக்கிறது நம் காதல்..       165

கீழ் தளத்தில் தொடங்கிய
உன் பார்வை
முதல் தளத்தில் தொடங்கிய
உன் காதல்
இரண்டாம் தளத்தில்
தொடங்கிய உன் அணைப்பு
மூன்றாம் தளத்தில்
தொடங்கிய உன் முத்தம் என
இப்போது
கீழ் தளத்தில்
பார்வையோடு கலந்த
அணைப்போடு
முத்தத்தை பெற்றுக்
கொள்கிறது உன் காதல்..    166

வான் வெளியாய்
உன் உதடுகள்
மழை பொழியும் போது..         167

போதும் என்று
பொய் சொல்ல கூட
மறந்தேன் - இரவில்
பெய்த உன் முத்த
மழையினில்...                              168

மெல்லிய ஆடையில்
ஓர் மெளனம்
மெளனத்தை போல
ஓர் மெல்லிய ஆடை
துல்லியமாய் நீயும்
குறி வைக்கிறாய்
மெல்லிய மெளனமாய்
என் இதழில்
ஓர் முத்தமிட...                    169

உன் உடைகள்
இரவை உடுத்திக் கொள்ள
ரோஜாவோ
மல்லியோ
அல்லது
ரோஜா மல்லியாகவோ
நம் இரவை
எடுத்துக் கொள்ள
நாமும் கொஞ்சம்
துணைபுரிவோமா?     170

No comments:

Post a Comment