January 29, 2015

2015 கவிதைகள் 151 to 160

நீந்த மறந்த
மீனைப் போல
உன் காதலை
காண மறந்த
நானும்
அழுகிறேன்
மீனை விட
பெருந் துயரமாய்...           151

படகில் அமர்ந்து
கடலை பார்க்கிறேன்
கடலை பார்த்து
உன் நீண்ட
காதலை நினைத்து
பார்க்கிறேன்...                  152

கடற்கரை மணலில்
கால்கள்
புதையும் ஆழம்
உன் பிரிவின்
ஓர் குறியீடு...                153

கோடுகள் வரைந்த
மணலில் மேடுகளில்
மெல்லிய உன்
காதல் புன்னகை
உன் கால்களை
மணலாய் என்
கை விரல் தொடும் போது..    154

சூரியன் சுகமாய்
பார்க்கிறான்
நீயும் நானும்
சிரித்து பேசியதை விட
உன் விரல் நீட்டி
நீ பேசியதை....                    155  

கடலில் செலுத்திய
வலையை
இழுப்பதை போல
உன்னுள் நான்
செலுத்திய
காதலால்
முத்தத்தை இழுக்கிறேன்
/இழக்கிறேன்....                156

நுரையிட்டு
நூதனமாய் முத்தமிடும்
அலையை போல
உன் கரம்
தொட்டு காத்திருக்கிறேன்
என் நுனிவிரல்
எழுதிய கவிதை கொண்டு..  157

கீ போர்டு கொண்டு
உன் ஓவியம்
வரைகிறேன்
உன்னைப் பற்றி ஓர்
கவிதையாய்..                    158

உறங்குவதாய் நினைத்து
ஏங்குகிறது
என் இரவு உலகம்...          159

எல்லையற்ற
இவ்விரவில்
நம் இரண்டு விரல்கள்
மட்டும் எல்லையற்ற
சந்தோசத்தில்
கடக்கிறது காலையை...     160

No comments:

Post a Comment