January 2, 2015

2015 கவிதைகள் 21 to 30

சமயம் பார்த்து சட்டென்று
நான் உனக்கு கொடுத்த
முத்தம் தான்
என் பல சாதனைகளை
பின்னுக்கு தள்ளுகிறது..    21

சேலையை உடுத்துவது போல
கலைவது தான் உன்
கை வந்த கலை
என் சிலையே!                              22

மஞ்சளோ, பச்சையோ
நீ உடுத்தும் உடையை விட
உன் நடை தான் என்னை
நடத்த சொல்லுகிறது
இரவு நாடகத்தை..                      23

முத்தம் இடுவது போல
நடித்து காட்டினேன்
சத்தம் இல்லாமல்
நீ கொடுத்து போனாய்
என்னை நடுங்க வைக்கும்
ஓர் முத்தத்தை ...                      24

முடிவுறும் முன்னே தொடங்கி
விடுகிறாய் முத்தத்தின்
முத்தத்தை - இரவா? பகலா?
எந்நேரமும் ஒரு குழப்பம்       25

நுனி விரல் முத்தம் முடிந்து
தொடங்கி விடுகிறது
இதழ் முத்தம்...                            26

இருளில் இதழால்
வெளிப்படுகிறது காதலின்
வெளிச்சம்...                                27

இறுக பிடித்த கைவிரல்
இறுதியாக விடுவிக்கிறது
நம் இருவரின் இதழை...          28

உன்னை காண்பதற்காக
வந்து அமர தொடங்கியவன்
உன்னை உண்ண
தொடங்குகிறேன் விழிகளாலே 29

கடவுளை வணங்கிய படி
கண் அடிக்கிறாய் என்னை
பார்த்து - அப்போதே
தொடங்கிற்று தெய்வத்தின்
சம்மதம்                                          30

No comments:

Post a Comment