January 5, 2015

2015 கவிதைகள் 61 to 70

என் கவிதையால்
உன் முகத்தை
வரைய தொடங்கினேன்
உன் இதழுக்கு எந்த
ஒர் எழுத்து பொருந்தும்
என்று பெருத்த யோசனைகளை
கடந்து நானும் வரைந்தேன்
"ம்" என்ற ஒற்றை எழுத்தை..     61

முகவரி அற்ற என்
காதலுக்கு
"முகா" என்ற பெயரை வைத்து
முத்தமும் வைத்தாய்...              62

இடங்கள் அற்ற இடங்களில்
என் இதயத்தில்
அமர்ந்து கொள்ளும்
பாக்கியம் உனக்கு மட்டும் தான் 63

உன்னைவிட உன்
காதலையே அதிகம்
சுமக்கிறது என் கவிதைகள்..    64

இரவில் இருந்து விலகி
இவ்வுலகம் போகும் பகலுக்கு
முன் முடித்து விடுகிறேன்
ஓர் அழகான கவிதையை
உன் இதழைப் போல்...             65

பேருந்தோ, பெரும் நீளம்
கொண்ட புகைவண்டியோ,
உன் புன்னகையே தெரிகிறது
ஜன்னலின் வழியே...               66

அடை மழையில்
அனைவரும் பேருந்திற்காக
காத்திருக்கிறார்கள் நானோ
உன் கவிதைக்காக
காத்திருக்கிறேன்...                 67

ஞானமாக உன்னைப்
பற்றி ஒரு கவிதை
கிடைப்பதால்..  
புத்தனுக்கு எப்படி
போதி மரமோ, அப்படி தான்
எனக்கும் நீ நிற்கும்
பேருந்து நிலையம்..                68

குளிர்கிறது என்று
நான் சொன்னால்
குதூகலமாய் ஓடி வந்து
விடுகிறாய் ஓர் முத்தமிட..
நினைவுகளில் கூட...             69

உன் முதல் முத்தத்தை
மீட்டெடுக்கும் முயற்சியில்
இருக்கிறேன் என் கவிதையின்
வழியே மீண்டும்
நீ இடுவதற்கு..                           70

No comments:

Post a Comment