புதிய
இரவு உடை உடுத்தும் போது
என்னை விட நீயே
புத்துணர்ச்சி பெற்று விடுகிறாய்.. 141
நீ ரசித்த பாடல்களை
உன் குரலிலே
ரகசியமாய் நானும்
ரசித்துக் கொள்கிறேன்.. 142
பனித்துளி போல
என் உயிர் துளி
அதில் தெரியும்
வானமாய்
உன் காதல்.. 143
நத்தை கூடு
நகர்வதை போல
நானும் நகர்கிறேன்
மணல் மேட்டில்
உன் காதலை
தேடி
உன் காதலின்
மடியை தேடி
கிடைத்த உன்
காதலில் நானும்
வசிக்க தொடங்கினேன்
மணலின் மீது
வசீகரம் மிக்க
நத்தைக் கூடாய்... 144
எவ்வாறு அடைந்தேன்
என்று நானும்
யோசிக்கிறேன்
நம் காதலின்
இருப்பிடத்தை
இருப்பது நீயும்
நானும் என்று
தெரிந்த பிறகு
இன்னும் என்ன யோசனை
என்று யோசிக்கிறேன்.. 145
நகரத்தின் வீதியில்
அலைந்து திரிகிறேன்
அதிகமாய்
உன்னோடு
இருந்தும் உறவாட
முடியாத
உறவை நினைத்து
உறங்க செல்கிறேன்
மன்னித்து விடு... 146
உலக இருப்பிடம்
எது என்று
எனக்கு தெரியாது
ஏன் என்னையும்
எனக்கு தெரியாது
ஆனாலும்
இப்போது
நான்
இருப்பது
உன் இதயம்... 147
கருவறை வாசம்
உன்னோடு
நான் இருக்கும்
இவ்வறை
இதுவரை
யாருக்கும் தெரியாது
ஏன் உனக்கே
தெரியாது... 148
உலகத்தின் மீது
கண்களை வைத்தேன்
உன் மீது
மட்டும்
காதலை வைத்தேன்.. 149
என் கவிதையும்
ஆடுகிறது
காற்றில் ஆடும்
காகிதம் போல.... 150
No comments:
Post a Comment