போதும் என்று தான்
நான் சொல்கிறேன்
இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம்
என கொஞ்சலாகவே
ஊட்டுகிறாய் உன் இதழை.. 71
கொஞ்ச நாளாக
கொஞ்சலாகவே
கவிதைகள் அமைகிறது
உன் பழக்க தோசம் போல.. 72
உன்னை அனைத்து
உறங்கிய இருளும்
அடர்ந்திருக்கிறது என்
அலுவலக அறையிலும்.. 73
அதிகமாய் உன்னிடம்
வாங்கிய முத்தம் தான்
அதிகமாய் கொடுக்க
வைக்கிறது உன்னிடம்... 74
சிதம்பர ரகசியம் தான்
நீ என்னை பார்த்து சிரித்து
திரும்புகிற ரகசியமும்.. 75
உறை மேல் முகவரி போல
என் உதட்டின் மேல்
உன் இதழின் முகவரி.... 76
உன் கண்கள்
உன் காதலை விட
உன் இதழ் இல்லாமல்
என் கவிதைகள் இல்லை.. 77
"டேய் மாமா" என்ற
உன் ஒலியெடுப்பே!
என்னை ஓயாமல் எழுதச்
சொல்கிறது வண்ண வண்ண
ஒளிகளை கூட்டி.. 78
தப்பு தப்பாய் வந்த
கனவுக்கு பின்
இனி உன்னை தாவணியில்
எப்போது பார்க்க முடியும்
என்று நானும் தவிக்கிறேன்.. 79
"குட்டிமா" என்று நீ
கூப்பிடும் போதெல்லாம்
குட்டி உம்மா கொடுப்பதாய்
நானும் சிரித்துக் கொள்கிறேன். 80
No comments:
Post a Comment