January 4, 2015

2015 கவிதைகள் 51 to 60

வறுமை நிறைந்த
ஓவியம் - வான்கோ
பெறுமை நிறைந்த
காவியம் - எனக்கோ
உன் காதல்         51

வளர்ந்த குதிரை
கடற்கரை மணலை
தன் கால்களால்
வேகமாக வாரி இரக்கிறது
உன் ஞாபங்களை போல,
இப்போது சிலுசிலுர்த்து
கொள்கிறது முத்தத்தை
பெற்ற சலசலப்பில்
மெதுவாய் நடக்க தொடங்கிற்று
மென்மையான பெண்மை
கலந்த உன் நடையை போல.    52

அச்சம் வருகிறது பெண்ணே!
உன் மச்சம் பார்த்த நொடியில்,
மிச்சம் இருந்தால் கொடு
உன் மச்சத்தை,
உச்சங்கள் அடையும்போது
என் இதழ்களால்
நானும் தொட்டுக் கொள்ள..     53

விண்வெளி தாரகைகள்
தாரத இன்பம்
உன் கைவிரல் தொட்டவுடன்
நானும் பெற்றேன்,
அந்திம இரவு
அளவில்லாத உன் பொழிவு
இது அல்லவா வாழ்க்கை..       54

இனியும் என்ன தயக்கம்?
இருளும், இன்பமும்
கலந்த இந்த மயக்கத்தினுடயே
கனவுகளில் உள் புகுந்து
நம் இருவரின் வேஷத்தை
கலைத்துக் கொள்ள..               55

முந்திரிச்சாறாய் உன்
முத்தத்தில் நான்
மூழ்கி இருந்த போது
சாஸ்திரம் என்ன?
சரித்திரம் என்ன?
சங்கொலி படரும்
போர்க்களம் என்ன?
போதுமே! என்று
நான் ஒலியெடுக்க
கூட முடியாத போது
உன் புன்னகை மட்டுமே
ஒளியாய் இவ்வுலகிற்கு..    56

உன் காதலை கண்டு
மயங்கி இருக்கிறேன்
அதனால் என்னவோ!
கடலை கண்டு
சற்று தயங்கி நிற்கிறேன்
நீ இல்லாமல்..                        57

உன் காதலை பாடும்
என் கவிதையில்
என் சிறு முத்தம்
கலந்து இருக்கிறது..
நீ வாசிக்கும் தருவாயில்
உன் கண்களை அடைவதற்கு
உன் இதயத்தை தொடுவதற்கு
எந்நாளும் காத்திருக்கிறது..  58

புது நெல்லாய் வளர்ந்தாய்
பூக்களாய் ஆர்பரித்தாய்
அழகியலில்
உன் ஆடை கூட ஆடுகிறது
ஓர் அழகிய நடனம்..
நளினமாய் பாடும்
உன் பார்வை இது
தானே சிறப்பு அந்த
ரகசிய இரவில்               59

பதில் என்ன தரப் போகிறாய்
என் உயிரே!
முத்தமா?
நான் கேட்டதும் அதுதானே!!  60

No comments:

Post a Comment