January 22, 2015

2015 கவிதைகள் 111 to 120

ஏதாவது பேசேன்
என்பாய்  எப்போதும் நீ
இப்போது எப்போதும்
பேசிக் கொண்டு இருக்கிறேன்
கடல் அலைகளோடும்
கடற்கரை மணலோடும்
உன் நினைவுகளை..         111

ஒரு ருபாய் நாணயத்தின்
பூவாக உன் முகமே
தெரிகிறது - நாணயம்
சூப்பர் மார்கெட் விளம்பர
பலகையில் ..                    112

நாளை இருப்பதுகென்று
ஒர் இடம் வேண்டுமென்று
அம்மா சொல்கிறாள்
நான் இருப்பதற்கு
உன் இதயம் போததா என்ன? 113

நானும் நீயும்
தொலைத்த இரவுகளால்
இந்த இரவும்
இப்போது கசக்கிறது...     114

ஆயிரம் படிகளை 
கடக்கிறேன் காதலே 
உன் மேல் உள்ள அன்பால்..    115

இருப்பதாய் நினைத்து 
நடக்கிறேன் இதயமே 
என் இதயம் துடிப்பது 
கூட உன் கருணையில் தான்..     116

திருமணத்திற்காக 
திருவண்ணாமலை 
நீரில் மூழ்கி எழுந்தேன்
உன் நினைவு வந்ததும் 
கண்ணீரோடு கரையை 
கடந்தேன்..                                   117

கடவுளுக்கும் கடிதம் எழுதினேன்
உன் ஞாபகத்தில் 
அது காதல் கடிதமாகமே 
மாறிவிட்டது...                   118

என்னையும் நான் மறந்து
கடவுளுக்கு நான் வாங்கிய 
பூவை பார்த்து நீயும் சிரித்தாய்
மல்லிகை பூ...                 119

ஒன்றுமில்லாத இரவை 
கூட உன்னால் எப்படித் தான்
அலங்கரிக்க முடிகிறதோ
ஒரேயொரு மல்லிகையை 
கொண்டு....     120


No comments:

Post a Comment