வரிகள் அனைத்தும்
என்னுடையது அல்ல
வானம் தந்த
மழையை போல
அனைத்தும்
உன்னுடையது..
தினம் தினம்
நம் தினம்
அனுதினமும்
சம்மதம்
அகிலமும்
ஆனந்தமாய்
உன்னோடு ஒர்
கைவிரல் கோர்க்க..
நீர் நீராய்
கண்ணில்
வடியும் நீரினில்
வாழ்கிறேன்
சாலையோர நாய்
போல நீ என்னை
என்னும்போது..
பட்டு உடுத்தி
நீ வந்த பிறகு
எட்டு எடுத்து
வைக்கும் குழந்தையை போல
உன்னை எண்ணியே
என் வாழ்க்கையில்
எட்டு எடுத்து வைக்கிறேன்..
சிறு நதியாய்
வடியும்
என் கண்ணீர்
எப்போதும் வந்தடைகிறது
உன் காதல் கடலில் ..
மெளனமான
இந்த சிறு நதியை
பெருங்கடலாய் சீற்றம்
அடைய வைக்கிறது
உன் காதல்..
புரியும் கவிதை
கூட
புரியவில்லை உனக்கு
உன்னை புரிந்ததால்
தான்
கவிதையே எனக்கு
காரிருள் தந்த
கவியில்
உன் வெள்ளைச்
சிரிப்புகளின்
ஒளியாய்
ஒலிகள்...
No comments:
Post a Comment