January 8, 2015

அச்சு முறுக்கு

அவள் பிள்ளையின்
பசியை நினைத்து
அச்சத்தோடு விற்கிறாள்
அச்சு முறுக்கு..

இவள் அச்சத்தோடு கூச்சமே
இல்லாமல் விற்கிறாள்/
நிற்கிறாள் தன் மார்பை திறந்து..

குறையாத அச்சு முறுக்கு
ஒவ்வொருவரிடமும்
கொண்டு சேர்க்கிறது
குடும்பத்தின் வேதனையை
வேகம் குறைந்த குரலிலே
அச்சு முறுக்கு, அச்சு முறுக்கு
என்று...

குறைந்த ஆடை
யாரோ ஒருவனின் காமத்தை
குறைக்கிறது குரல் ஏதூம்
இல்லாமலே...

ஒவ்வொருவரும் வாங்க
மறுக்கும் அச்சு முறுக்கும்
அச்ச முறுக்காய் போனது..

ஒருவன் போனால்
இன்னொருவன் என்று
அலையாமல் அடையாளம்
தேடும் ஆட்களிடம்
அச்சமே இல்லாமல்
வாங்கி கொண்ட பணமும்
தன் மார்புக்குள் போனது...

வாழ்க்கையிலும் ஓர் வறுமை
இருக்கிறது,
காமத்திலும் ஓர் வாழ்க்கை
இருக்கத் தான் செய்கிறது..

- SunMuga-
08-01-2014 23.22 PM

No comments:

Post a Comment