November 1, 2015

2015 கவிதைகள் 1321 to 1330

கவிதையாய்
பிள்ளைகள் பெற்றும்
இணையா தம்பதிகள் நாம்... 1321

எந்த கவிதை
என் காதலுக்கும்
என் கண்ணீருக்கும்
ஈடு என்றால்
அது நான் எழுதிய
முதல் கவிதை தான்
முதல் கவிதை எது?
"முத்தமா"               1322

விடியலுக்கு விதி
விடிவது என்றால்
நம் காதலின் விதி
என்னவாக இருக்கும்
என் காதலே!!         1323

கனத்த மழையொன்றில்
கரம் நனைத்தேன்
என் கண்ணீரை கொண்டு
காதல் மழை
என்னோடு இல்லாத
கனமொன்றை நினைத்து...   1324

நீயின்றி
வேறு யாராக இருக்க முடியும்
என்னை அனைத்து
முத்தமிட்டது
அந்த இரவின் கனவில்... 1325

தேசத்தின்
ஒரு மனிதனாய்
உன் தேகத்தின்
சக காதலனாய்
உன்னைத் தேடும்
என் கண்களின் வழியே
இந்த தேசத்தின்
முதல் மொழியில்
உன்னோடு பேசிக்
கொண்டு இருக்கிறேன்...    1326

அடையாளங்களற்று
இருக்கும்
இந்த இரவில்
நான்
இந்த உலகில் வாழ
அடைகாக்கிறது
உன் காதல்....        1327

உன் இடை என்ற
வானத்தில்
மெல்லிய மின்னல்
கீறும்
என் கை ரேகையாய்
முத்த மழையின்
ஓர்
முன்னோடியாய்...   1328

முதல் முதலில்
நானும் ரசித்தேன் அன்பே
கத்திரி பூ
வண்ணத்தின் சேலையில்
என்னையே நான்
அந்த கண்ணாடியில்
உன் கண்களின் வழியே!!    1329

வார்த்தைகள்
என்பது வரமாய் போகிறது
உன்னைப் பற்றி
எழுதும் போது மட்டும்
என் அன்பே!!        1330

No comments:

Post a Comment