என் நெஞ்சின்
துடிப்புகள் அனைத்தும்
உன் காலடி ஒசைகளாய்
கேட்க காத்திருக்கிறது.. 1431
என் நினைவில்
மறைந்திருக்கும்
வெளிச்சம் நீ !
வெளிச்சத்தில் கூட
நான் உன்னை
காண முடிவதில்லை.. 1432
முடிவற்ற நினைவுகள் நீ!
நினைவுகளில் முடிவற்ற
கண்ணீர் நான்.. 1433
விழிகள் மூடும் போது
உன் முகம்
என்னை தாங்கும்
எப்பொழுதும் விழி மூடியே
இருக்க தான்
நானும் காத்திருக்கிறேன்... 1434
உனக்கும் எனக்குமான
வாழ்க்கையின்
தொடர்பு சங்கலியில்
ஒரு கன்னி காதல்
இன்னொரு கன்னி முத்தம்.. 1435
மனநிலைகளை விட
உடல் நிலை
சரியில்லாத காலத்தில் தான்
இன்னும் அதிகமாக
தேடுகிறேன் உன்னை!! 1436
ஜன்னலின் வழியே
நிலவு தெரிகிறது
நிலவின் வழியே
நீ தெரிகிறாய்
உன் வழியே
காதல் தெரிகிறது
காதலின் வழியே
உலகம் புரிகிறது
உலகத்தின் வழியே
உன் பிரிவில்
கண்ணீர் விரிகிறது.. 1437
நீயும் நானும்
வாழ்வதற்கான
சக்திகளை பெருக்கிக்
கொண்டு இருக்கிறேன்
இக்கவிதையின் வழி
கண்ணீர் அற்று
காதல் மட்டுமே நிரம்பி... 1438
நம் வாழ்க்கை பயணத்தில்
பாதியாய் இருக்கிறது
இப்பிறவியின்
பெரும் சோகம்
இருந்தும்
பிறந்த உயிர்களை
நினைத்து பசுமையான
சோலைகளை போல
பயணம்
நீண்டு கொண்டு தான்
இருக்கிறது... 1439
மழை பிறக்கிறது
ஒரு துளியாய்
முத்தம் இறந்து
மறுதுளியாய்
முத்தம் பிறக்கிறது
இந்த இரவில்.. 1440
No comments:
Post a Comment